அருணாசலப் பிரதேசத்தில் டோன்யி போலோ பசுமை விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் / Prime Minister Modi inaugurated Tony Polo Green Airport in Arunachal Pradesh
அருணாச்சல பிரதேசத்தில் விமான நிலையம் இல்லாத நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.645 கோடி செலவில், பசுமை விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த விமான நிலையத்துக்கு, 'டோன்யி போலோ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மாநில தலைநகர் இடாநகரில் இருந்து 15 கிமீ தொலைவில் இந்த விமான நிைலயம் அமைந்துள்ளது.
இதேபோல், ரூ.8,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 600 மெகா வாட் திறன் கொண்ட நீர்மின் நிலையத்தையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
0 Comments