ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பல்வகை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் / Prime Minister Narendra Modi laid foundation stone for various projects in Visakhapatnam, Andhra Pradesh
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ரூ.10,500 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்
இந்நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. ஒய்.எஸ்.ஆர். ஜெகன் ரெட்டி, ஆந்திரப் பிரதேச ஆளுநர் திரு பிஸ்வ பூஷன் ஹரிசந்தன், மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆந்திரப் பிரதேச சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை சுமார் 450 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்த நிலையம் நாளொன்றுக்கு 75,000 பயணிகளுக்கு சேவை செய்யும் மற்றும் நவீன வசதிகளை வழங்குவதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்.
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை நவீனமயமாக்கவும் மேம்படுத்துவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
திட்டத்தின் மொத்தச் செலவு ரூ. 150 கோடி. மீன்பிடித் துறைமுகம், மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட பின், அதன் கையாளும் திறன் நாளொன்றுக்கு 150 டன்களில் இருந்து சுமார் 300 டன்களாக இரட்டிப்பாகும்.
0 Comments