பி.டி.உஷா தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1979 முதல் 1998 வரையில் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக தடகள விளையாட்டில் பி.டி.உஷா பங்கேற்று வந்தார்.
ஆசிய விளையாட்டில் 4 தங்கம் மற்றும் 7 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவர் சொல்லி இருந்தார்.
சக விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் ஆதரவுடன் மனு தாக்கல் செய்வதாக சொல்லி இருந்தார்.
58 வயதான பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 16-வது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை அலங்கரிக்க உள்ள முதல் பெண்மணியும் அவர்தான்.
0 Comments