Recent Post

6/recent/ticker-posts

பொது விநியோக திட்டம் / PUBLIC DISTRIBUTION SYSTEM

TAMIL
நோக்கம்
  • தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும். 
  • பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது.
பொது விநியோக திட்டத்தின் நோக்கங்கள்
  • தமிழ்நாட்டில் உள்ள நீடித்த பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையை நீக்க
  • அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து குடிமக்களை பாதுகாக்க
  • அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம், நுண் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்க
  • உள்நாட்டு எரிபொருள்களை (மண்ணெண்ணை மற்றும் எல்பிஜி) மலிவாக வழங்க
  • பயனாளிகள், நியாய விலைக் கடைகளை எளிதாக அணுக
  • ஏழை மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் வழங்க
  • ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில், அத்தியாவசியமான பொருட்களை வழங்க
பொது விநியோக திட்டத்தின் செயல்திறன்களை அமலாக்கம் செய்யும் முக்கிய உத்திகள்
  • அட்டைதாரர்கள் கொடுக்கும் புகார்களை திறம்பட கையாளும் முறைகள் செயல்படுகின்றது
  • ஏற்கனவே இருக்கும் நியாய விலைக் கடைகளுக்கு செல்ல சிரமம் உள்ள கிராமங்களுக்கு பகுதி நேர கடைகள் திறக்கப்பட்டுள்ளது
  • தற்காலிகமான மற்றும் பாதை வரைபடங்கள் மூலம் அத்தியாவசியமான பொருட்களை சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்புடன் ஒரு இடத்தில் இருந்து கடைகளுக்கு பரிமாற்றம் செய்யும் முறைகள்
  • மேம்படுத்தப்பட்ட முறைகள், வலுவான சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் முறைகேடுகளை தடுக்கும் முறைகள்
  • மின்னாளுகை மூலம் நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியமான பொருட்களை பிழை இல்லாத மற்றும் சரியான அளவுகளை ஒதுக்கீடு மற்றும் பரிமாற்றம் செய்யும் முறைகள்
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்குமான பொது விநியோக திட்டம்
  • தமிழ்நாடு அனைவருக்குமான பொது விநியோக திட்ட செயல்முறையைப் பின்பற்றுகிறது. அதில் வறுமைக் கோட்டிற்கு கீழ் மற்றும் வறுமைக் கோட்டிற்கு மேல் என்ற பாகுபாடு இல்லை. 
  • இருப்பினும் இம்மாநிலம் அந்தயோதயா அண்ணா யோஜனாவை (AAY) செயல்படுத்துகிறது மற்றும் தற்போது 18,63,185 அந்தயோதயா அண்ணா யோஜனா பயனாளர்கள் உள்ளனர். 
  • பிழை இல்லாக் கணக்கெடுப்பு முறை இல்லாததாலும் தற்போதைய குறியீட்டு முறையும் குறைபாட்டுடன் இருப்பதாலும் வறுமையை ஒழிக்க இத்திட்டம் தொடங்கப்பட்டது.
பொது விநியோக திட்ட அமைப்புமுறை
  • தமிழ்நாட்டின் பொது விநியோக திட்ட அமைப்புமுறை கொள்முதல், சேமிப்பு, உணவு தானிய வழங்கல் மற்றும் பரந்த நியாய விலைக் கடைப் பிணையம் மூலம் நுகர்வோர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பரிமாற்ற செயல்பாட்டை கண்காணித்தல், வழிமுறை, செயல்பாட்டு மீறல் அல்லது முறைக்கேட்டிற்க்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் போன்ற செயல்பாட்டு முறையை பின்பற்றுகிறது.
பொது விநியோக திட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள்
  • உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
  • தமிழ்நாடு உணவுப் பொருள் கழகம்
  • இந்திய உணவுக் கழகம்
  • கூட்டுறவு சங்கங்கள்
  • மகளிர் சுய உதவிக் குழு

Purpose

  • The objective of the Public Distribution Program in Tamil Nadu is to provide food to all citizens, especially the poor. Public Distribution Program provides essential commodities at affordable prices to poor people every month through Fair Price Shops.
Objectives of Public Distribution Scheme
  • To eliminate chronic hunger and food shortages in Tamil Nadu
  • To protect citizens from the ill effects of rising prices of essential commodities
  • Reduce micronutrient deficiencies by providing essential nutrients
  • To provide cheap domestic fuels (kerosene and LPG).
  • Beneficiaries have easy access to fair price shops
  • To provide essential commodities to poor people at affordable prices
  • To deliver essential goods on time every month
Key strategies for implementing the Public Distribution Plan's effectiveness
  • Mechanisms are in place to effectively deal with cardholder complaints
  • Part-time shops have been opened in villages where it is difficult to access existing fair price shops
  • Methods of timely and safe transfer of essential goods from one location to stores through temporary and route maps
  • Improved methods of preventing fraud through stronger law enforcement and crime prevention measures
  • Mechanisms for error-free and correct quantity allocation and transfer of essential commodities to fair price stores through electronic means
Public Distribution Scheme for all in Tamil Nadu
  • Tamil Nadu follows the Universal Distribution Scheme process. It does not discriminate between below poverty line and above poverty line. 
  • However the state is implementing Andayodaya Anna Yojana (AAY) and currently there are 18,63,185 Andayodaya Anna Yojana beneficiaries. The scheme was launched to eradicate poverty due to lack of error-free enumeration system and the existing coding system was flawed.
Public Distribution Scheme System
  • The Public Distribution Scheme system of Tamil Nadu follows an operational system of procurement, storage, supply of food grains and supply of food to consumers through a wide network of fair price shops and monitoring, procedural, operational violation or action against irregularity.
Companies engaged in public distribution scheme activities
  • Department of Food Supply and Consumer Protection
  • Tamil Nadu Food Corporation
  • Food Corporation of India
  • Co-operative Societies
  • Women Self Help Group

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel