TAMIL
- புது வாழ்வு திட்டமானது தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் செயல்படுத்தப்படும் ஆற்றல் வளர்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பு திட்டமாகும். இத்திட்டமானது சுமார் 6 ஆண்டுகளில் ரூபாய் 717 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
- தமிழகத்தின் 16 மாவட்டங்களில் (புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் உட்பட) உள்ள 70 பின்தங்கிய நிலையில் உள்ள ஒன்றியங்களுக்குட்பட்ட 2509 ஊராட்சிகளை இத்திட்டம் பயன்பெறச் செய்கிறது.
- 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் துவக்கப்பட்ட போதிலும் திட்டத்தின் முழு அளவிலான செயல்பாடுகள் 2006- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
- இத்திட்டத்தின் இலக்கு மக்கள் தொகை எனப்படுவது மிகவும் ஏழைக் குடும்பங்கள், நலிவுற்றோர், ஊனமுற்றோர் மற்றும் பட்டியலிடப்பட்ட சமூகங்களை உள்ளடக்கியுள்ளது.
- இத்திட்டமானது தளர்த்தப்பட முடியாத திட்டக் கோட்பாடுகளைக் கொண்டு மக்களாலேயே செயல்படுத்தும் முறையின் மூலம் மக்கள் அவர்களின் தேவையை அவர்களே கண்டறிந்து திட்டமிடுதல், செயல்படுத்துதல், கால அளவை நிர்ணயித்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றைப் பின்பற்றச் செய்கிறது.
- இதன் மூலம் புதுவாழ்வு திட்டமானது மக்கள் திட்டம் என்ற வலுவான உணர்வை மக்களிடையே ஏற்படுத்தச் செய்கிறது.
ENGLISH
- Puthu Vazhvu Project is an empowerment and poverty alleviation program implemented by the Department of Rural Development and Panchayat Raj, Government of Tamil Nadu.
- The project will be implemented in about 6 years at an estimated cost of Rs 717 crore.
- The scheme benefits 2509 panchayats under 70 backward unions in 16 districts of Tamil Nadu (including the newly created Tirupur district). Although it was launched in November 2005, full-scale operations of the scheme were implemented only in August 2006.
- The target population of the scheme includes very poor families, vulnerable, disabled and scheduled communities.
- The program follows a people-driven approach with unwavering project principles that enable people to identify their own needs, plan, implement, schedule and monitor.
- In this way, the Puthu Vazhvu project creates a strong feeling among the people that it is a people's project.
0 Comments