மாநிலங்களவைக்கு 12 அலுவல் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் நேற்று முன்தினம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அலுவல் ஆலோசனைக் குழு, விதிமுறைகள் குழு, உரிமைக் குழு ஆகிய மூன்றுக்கும் தலைவராக மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு உறுதிமொழிக் குழு மீண்டும் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன், அப்பதவியை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் வகித்தார்.
மனுக்கள் குழு தலைவராக பிஜு ஜனதா தளம் கட்சியின் சுஜித்குமார் அமர்த்தப்பட்டுள்ளார்.
பாஜகவின் மூத்த எம்.பி.க்களில் லஷ்மிகாந்த் வாஜ்பாய் - கீழ்நிலை சட்டம் இயற்றல் குழுவிலும், சி.எம்.ரமேஷ் - குடியிருப்பு குழுவிலும் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நெறிமுறைகள் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜவடேகரும், அவையில் சமர்ப்பிக்கப்படும் குறிப்புகள் குழுவில் காமாக்யா பிரசாத் தாசாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு குழுவிலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 10 பேர்உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments