Recent Post

6/recent/ticker-posts

பெரம்பலூர் அருகே எறையூரில் சிப்காட் தொழில் பூங்கா திறப்பு / SIPCOT INDUSTRIAL PARK INAUGURATES BY CM STALIN IN PERAMBUR

  • தமிழக அரசின் 2022-23 பட்ஜெட்டில், கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதியதொழில் பூங்காக்கள் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
  • இதன்படி, பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அங்கு ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.
  • அப்போது, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், கோத்தாரி ஃபீனிக்ஸ் அக்கார்டு நிறுவனத்துக்கும் ரூ.1,700 கோடிமதிப்பில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
  • இதன்மூலம் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், தைவான்நாட்டைச் சேர்ந்த 10 தொகுப்பு நிறுவனங்களுடன், ரூ.740 கோடி முதலீட்டில், 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel