TAMIL
நோக்கம்
- நாட்டின் வீட்டுப் பற்றாக்குறையை போக்கும் விதமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் மத்திய அரசு, அனைவருக்கும் வீடு, ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் நகரங்கள் என மூன்று திட்டங்களுக்கான வெவ்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டது.
- அதைத் தொடர்ந்து இந்த வாரம் குறைந்த வருவாய் ஈட்டும் மக்களுக்கான வீட்டுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது.
அம்பத்தூர் வீட்டுத் திட்டம்
- குறைந்த வருவாய் ஈட்டுவோருக்காக சென்னை அம்பத்தூரில் 2,300 வீடுகள் கொண்ட திட்டம் உருவாக்கப்படவுள்ளது. வீட்டின் விலை 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்துக்கு மொத்தம் ரூ. 380 கோடி செலவிடப்படவுள்ளது. இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்படும்.
அரசு அலுவலர்களுக்கு வீடு
- அரசு அலுவலர்களுக்கென தனியான வீட்டுத் திட்டமும் இத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சி’,‘டி’ பிரிவு அரசு அலுவலர்களுக்கு சென்னையில் வீடு கட்டித் தரப்படவுள்ளது.
- இதற்காக பாடிகுப்பம், வில்லிவாக்கம் பகுதிகளில் இடம் ஒதுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன.
- இந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தும்.
- இதில் உருவாக்கப்பட உள்ள வீடுகள் இரண்டு படுக்கை அறை வசதிகள் கொண்ட வீடுகளாகும். ரூ. 225 கோடி செலவில் இந்தத் திட்டம் உருவாக்கப்படவுள்ளது.
மக்களுக்கான வீடுகள்
- அனைத்துத் தரப்பு மக்களுக்கான வீட்டு வசதித் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய வீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்தத் திட்டங்களுக்கு ரூ. 674 கோடியே 96 லட்சம் செலவிடப்படவுள்ளது.
- தொலைநோக்குத் திட்டம் 2023-ன்படி சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் இந்த நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் நிதி உதவியுடன் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தோடு நலிவுற்ற பிரிவினருக்கான வீடுகள் கட்டப்படவுள்ளன.
- இந்தத் திட்டம் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்படவுள்ளன. இத்திட்டம் உத்தேசமாக ரூ. 457 கோடி 50 லட்சம் செலவில் உருவாக்கப்படவுள்ளன.
Purpose
- In order to overcome the shortage of housing in the country, the central government has issued different announcements for three schemes namely Housing for All, Smart City and Amruth Nagar, just two weeks ago. Following this, the Tamil Nadu government has also announced a housing scheme for low-income earners this week.
Ambattur Housing Project
- A project of 2,300 houses will be developed in Ambattur, Chennai for low income earners. It is also mentioned that the price of the house will be fixed at less than 20 lakh rupees.
- A total of Rs. 380 crores will be spent. The scheme will be implemented by the Tamil Nadu Government Housing Board.
House for government officials
- A separate housing scheme for government officials has also been announced. Houses will be built in Chennai for 'C' and 'D' category government officials. It has been announced that space will be allocated in Padikuppam and Villivakkam areas for this purpose. 500 houses of flats will be built in these places.
- This scheme will also be implemented by the Tamil Nadu Housing Board. The houses to be developed are two-bedroom houses. Rs. This project will be developed at a cost of 225 crores.
Housing for people
- New housing projects will be developed in Chennai, Kanchipuram, Vellore, Cuddalore, Krishnagiri, Salem, Madurai and Trichy districts to fulfill the housing needs of all walks of life. For these projects Rs. 674 crores and 96 lakhs will be spent.
- According to the Vision Plan 2023, houses for the weaker sections will be built in the Municipal Corporations and Municipalities including Chennai with the financial assistance of the State Government and the subsidy provided under the Central Government Scheme.
- The project is to be constructed by the Tamil Nadu Slum Replacement Board. The scheme aims at Rs. 457 crores to be developed at a cost of 50 lakhs.
0 Comments