ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை அடக்குவதற்காக அந்த நாட்டு அரசு கடுமையான அடக்குமுறையைக் கையாண்டு வருவதைக் ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை அடக்குவதற்காக அந்த நாட்டு அரசு கடுமையான அடக்குமுறையைக் கையாண்டு வருவதைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றியது.
ஜொமனி, ஐஸ்லாந்து நாடுகளால் கொண்டு வரப்பட்டு, 25 நாடுகளால் வழிமொழியப்பட்ட அந்தத் தீா்மானத்தில், போராட்டத்தின்போது போலீஸாரின் அத்துமீறல் தொடா்பாக நடுநிலையான விசாரணையை நடத்தக் கூடிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தலையை மறைக்கும் ஹிஜாப் அணியாததற்காக ஈரானின் சா்ச்சைக்குரிய கலாசாரக் காவலா்களால் கடந்த செப்டம்பா் மாதம் கைது செய்யப்பட்ட இளம்பெண் மாஷா அமீனி (22), காவலில் உயிரிழந்தாா்.
அதையடுத்து, அரசின் ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் வெடித்தது. இதில் 51 சிறாா் உள்பட 416 பலியானதாகக் கூறப்படுகிறது.
0 Comments