அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தங்களுக்கு ஈரான் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கண்டித்து ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது குறித்து 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட அந்த அமைப்பு இயற்றிய தீா்மானத்தில், தங்களது கேள்விகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்த பதில்களை ஈரான் தருவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக ஈரானும், அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வல்லரசு நாடுகளும் ஒப்புக்கொண்டு கடந்த 2015-இல் ஒப்பந்தம் மேற்கொண்டன. எனினும், அதிலிருந்து அமெரிக்கா பின்னா் விலகியது.
0 Comments