TAMIL
- விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய விரிவுபடுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒன்று தான் உழவர் பாதுகாப்புத் திட்டம்.
தகுதிகள்
- 2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் முதலியவற்றை உடைமையாகக் கொண்டு அந்த நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயதிற்குற்பட்ட குறு மற்றும் சிறு விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
- விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்திற்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரையுள்ள அனைத்து விவசாய குத்தகைதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் இவர்களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பயனடைவர்.
- இதனடிப்படையில் இக்குடும்ப உறுப்பினர்கள் கல்லூரி கல்வி உள்ளிட்ட உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் இவர்கள் வேறு எந்தக் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற்றாலும் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வழிவகை உள்ளது.
உதவித்தொகைகள்
- தொழிற்பயிற்சி நிறுவனம் (ITI), பல்தொழில் பயிற்சி நிறுவனம் (பாலிடெக்னிக்) மற்றும் இதர பட்டயப் படிப்புகளுக்கு ரூ. 1250 முதல் ரூ. 1950 வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்
- இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ரூ. 1750 முதல் ரூ. 2500 வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்
- முதுகலை பட்டப்படிப்புகளுக்கு ரூ. 2250 முதல் ரூ. 3750 வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கப்படும்
- சட்டம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை, அறிவியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கு இளங்கலையில் ரூ. 2250 முதல் ரூ. 4750, முதுகலையில் ரூ. 4250 முதல் ரூ. 6750 வரையிலும் ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
திருமண உதவித் திட்டம்
- சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகையை பெற தகுதி உள்ளவர்கள் அத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவர்.
- அவ்வாறு திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாதவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகையாக ஆணுக்கு ரூ. 8000 மற்றும் பெண்ணுக்கு ரூ. 10,000 வழங்கப்படும்.
முதியோர் ஓய்வூதியம்
- 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ. 1000 ஓய்வூதியமாக இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.
- The Farmers' Security Scheme is one of the new extended social security schemes to provide lifelong support to farmers and agricultural laborers engaged in agriculture and their families.
Qualifications
- Small and small farmers in the age group of 18 to 65 years who own nansey land not exceeding 2.5 acres or bunsey land not exceeding 5 acres etc. and cultivate directly on that land can benefit from this scheme.
- All agricultural tenants, laborers and their dependent family members between 18 years to 65 years of age who are engaged in agricultural occupation on wage or lease basis are eligible.
- Based on this, in order to encourage the members of this family to pursue higher education including college education, there is a way for them to receive educational assistance under this scheme regardless of any other educational assistance scheme.
Scholarships
- Vocational Training Institute (ITI), Polytechnic Institute And for other degree courses Rs. 1250 to Rs. Up to 1950 the scholarship will be awarded annually
- For undergraduate courses Rs. 1750 to Rs. 2500 per annum will be given as scholarship
- For postgraduate courses Rs. 2250 to Rs. 3750 per annum will be given as scholarship
- Vocational courses like law, engineering, medicine, agriculture, veterinary, science etc. in undergraduate Rs. 2250 to Rs. 4750, Post Graduate Rs. 4250 to Rs. 6750 per annum as scholarship.
Marriage Assistance Scheme
- Those who are eligible for the grant under the Marriage Assistance Scheme implemented by the Social Welfare Department will get the grant under the scheme.
- Those who are not able to get the scholarship under the marriage assistance scheme will be given the scholarship under this scheme.
- Under this scheme, marriage allowance per male is Rs. 8000 and for female Rs. 10,000 will be given.
Old Age Pension
- Destitute farmers and agricultural laborers above 60 years of age Rs. 1000 as pension can be availed through this scheme.
0 Comments