TAMIL
- இந்த திட்டத்தின் மேலாண்மை மட்டும் அமலாக்கம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் துவங்கப்பட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க சங்கம் (TNRTS) செயல்படுத்துகிறது.
- தமிழ்நாடு ஊரக புத்தாக்க சங்கம் (TNRTS) 07-07-2017 அன்று தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தை செயல்படுத்த, மாவட்டம் தோறும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊரக புத்தாக்க சங்கங்கள் துவங்கப்பட்டன.
- சங்கத்தின் ஆட்சிக் குழுவும், நிர்வாக செயற்குழுக்குளும் திட்டம் சார்ந்த முடிவுகளை எடுத்து, மாநில திட்ட மேலாண்மைக் குழுவை ஒருங்கிணைத்து வழிநடத்துவர்.
- மாநில, மாவட்ட மற்றும் வட்ட திட்ட மேலாண்மை குழுக்கள் வாயிலாக இந்த திட்டம் செயல்படுத்தபடுகிறது.
- வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) உலக வங்கியின் நிதியுடன் செயல்படும் திட்டம்.
- இந்தத் திட்டம் ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்டதாகும்.
- தமிழக கிராம சூழலை மறுசீரமைக்க வெவ்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. வறுமை ஒழிப்பைத் தாண்டி நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பது, நிதியுதவிக்கான வழிவகை செய்வது மற்றும் வேலைவாய்ப்புகளை பெருக்குவது போன்ற திட்டங்களை தமிழ்நாடு முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் செயல்படுத்த உள்ளது.
- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் (NRLP) மற்றும் தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் (TNPVP) நிறுவனமயமாக்கப்பட்ட நிதி முதலீடுகளை அடித்தளமாக கொண்டே இந்த திட்டம் உருவாக்கப்படுகிறது.
- Only the management and implementation of this scheme is implemented by the Tamil Nadu Rural Development Society (TNRTS) established under the Tamil Nadu Department of Rural Development and Panchayats.
- Tamil Nadu Rural Innovation Society (TNRTS) was formed and registered under the Tamil Nadu Societies Registration Act on 07-07-2017. To implement this plan, rural innovation societies were started in each district under the leadership of the District Collector.
- The Association's Governing Body and Executive Committee take program-specific decisions and coordinate and lead the State Program Management Committee. The scheme is implemented through State, District and Circle Project Management Committees.
- Vaazhndhu Kattuvom Project (Live and Show Project) is a project funded by the World Bank. The scheme was launched with the objective of promoting rural enterprises and increasing the income of rural people.
- Tamil Nadu has devised different mechanisms to rehabilitate the rural environment. The program is to be implemented in selected circles across Tamil Nadu to encourage rural enterprises to create sustainable livelihoods beyond poverty alleviation and increase their quality of life, providing avenues for financial assistance and increasing employment.
- The project is being developed on the basis of institutionalized financial investments from Tamil Nadu State Rural Livelihood Movement (TNSRLM), National Rural Livelihood Program (NRLP) and Tamil Nadu New Livelihood Project (TNPVP).
0 Comments