TAMIL
- மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும், அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுய உதவி குழுக்களை தமிழ்நாடு அரசு 1991ஆம் ஆண்டு உருவாக்கியது.
- மேலும் ஏழை எளிய நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005ஆம் ஆண்டு உலக வங்கி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புதுவாழ்வுத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு துவங்கி வைத்தது.
- அதன் பயனாக மகளிர் சுய உதவி குழுக்கள் தமிழ்நாட்டில் மாபெரும் சக்தியாய் உருவெடுத்து, இன்று 6.08 இலட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் 92 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
- தமிழ்நாட்டில் சுய உதவி குழுக்களை ஒருங்கிணைக்க ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டமைப்பின் கீழ் 20 முதல் 25 சுய உதவி குழுக்கள் இயங்கி வருகின்றன.
- இந்த சுய உதவி குழுக்களை மேற்பார்வையிட சமுதாய சுய உதவி குழு பயிற்றுநர்கள் உள்ளனர். சுய உதவி குழுவில் ஊக்குநராக செயல்பட்ட அனுபவமிக்க உறுப்பினர்களே சமுதாய சுய உதவி குழு பயிற்றுநர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் புதிய சுய உதவி குழுக்களை அமைப்பதற்கும் பயிற்றுவிப்பதற்கும் துணை புரிந்து வருகின்றனர்.
ENGLISH
- In 1991, the Government of Tamil Nadu formed self-help groups with the aim of empowering women socially and economically, thereby eradicating poverty. The Government of Tamil Nadu also started the Tamil Nadu Rehabilitation Project with the help of the World Bank in 2005 for the development of the poor and vulnerable people and women.
- As a result, Women's Self Help Groups have emerged as a great force in Tamil Nadu and today there are 6.08 lakh Women Self Help Groups with 92 lakh members.
- Panchayat level confederations have been formed to coordinate Self Help Groups in Tamil Nadu.
- 20 to 25 SHGs are functioning under each federation. Community Self Help Group Instructors are available to supervise these Self Help Groups. Experienced members who have acted as promoters in SHGs are selected as Community SHG Instructors. They are helping to form and train new Self Help Groups.
0 Comments