TAMIL
- தமிழ்நாட்டின் மூன்று நகரங்களில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு, கழிவு நீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோக முறைகளை உருவாக்குவதற்காக மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்திற்கான மூன்றாவது தொகுப்பு கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் ரஜித் குமார் மிஸ்ரா இந்தியா சார்பிலும், ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் இவ்வங்கியின் இந்திய அலுவலகப் பொறுப்பு அதிகாரி ஹோ யூன் யோங்கும் கையத்திட்டனர்.
- தமிழ்நாட்டில் தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் ஆகியவற்றின் கட்டமைப்புக்காக 2018ல் ஆசிய வளர்ச்சி வங்கியால் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பல தொகுப்பு நிதி வசதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இதில் மூன்றாவது மற்றும் கடைசி தொகுப்பாக இந்த ஒப்பந்தம் கையழுத்தாகியுள்ளது. இந்தத் தொகுப்பில் கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
- இந்த நிதி உதவி மூலம் கோயம்புத்தூரில் 59 கிலோமீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் சேகரிப்புக் குழாய்களுடன் பம்ப்பிங் மற்றும் மேலேற்று நிலையங்கள் அமைக்கப்படும்.
- கழிவுநீர் வெளியேற்றும் இடத்திற்கு கொண்டு செல்ல 14 கிலோமீட்டர் தூரத்திற்குக் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படும். தூத்துக்குடியில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான மழை நீர் வடிகால் முறைகள் அமைக்கப்படும்.
- வருவாய் இல்லாத குடிநீர் விநியோகத்தைக் குறைக்கும் வகையில் மீட்டர் பொருத்தப்பட்ட புதிய 115 குடியிருப்புப் பகுதிகளில் 1,63,958 வீடுகளுக்குக் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதற்காக 813 கிலோ மீட்டர் தூரத்திற்குக் குழாய்கள் அமைப்பதற்கான திட்டத்திற்கு இது உதவும்.
- கழிவுநீர் சேகரிப்பு முறை, தண்ணீர் சேமிப்பு, சுகாதாரம், துப்புரவு மற்றும் சுகாதாரம், தூய்மை ஆகியவை ஆகியவற்றின் பயன்கள் குறித்து விளக்குவதற்காக கோயம்புத்தூரிலும் மதுரையிலும் அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
- The Central Government and the Asian Development Bank have signed a Rs 1,040 crore loan agreement to develop sewage collection and treatment, sewage disposal and drinking water supply systems in three cities in Tamil Nadu to address climate change.
- The third tranche loan agreement for the Tamil Nadu Urban Investment Project was signed by Rajith Kumar Mishra, Additional Secretary, Department of Economic Affairs, Ministry of Finance, on behalf of India, and Ho Yoon Yong, Officer-in-Charge of the Bank's India Office, on behalf of the Asian Development Bank.
- In 2018, the Asian Development Bank approved a multi-package financing facility worth US$ 500 million for the infrastructure of drinking water supply and sewage disposal in 10 industrially important cities in Tamil Nadu.
- This agreement was signed as the third and last package. The cities of Coimbatore, Madurai and Tuticorin are featured in this collection. With this financial assistance, 59 km of pumping and lifting stations along with sewage collection pipes will be constructed in Coimbatore.
- A distance of 14 kilometers of sewage pipelines will be laid to carry the sewage to the disposal site. Rainwater drainage systems will be set up in Tuticorin to deal with climate change.
- This will help with the project to lay 813 km of pipelines to supply piped water to 1,63,958 households in 115 new metered residential areas to reduce non-revenue drinking water supply.
- Training will be given to all women SHGs in Coimbatore and Madurai to explain the benefits of sewage collection system, water conservation, hygiene, sanitation and hygiene and cleanliness.
0 Comments