ஒட்டன்சத்திரத்தில் 117 ஏக்கர் நிலத்தில் 4 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்று நடவு செய்து உலக சாதனை / A world record by planting 6 lakh saplings in 4 hours in 117 acres of land in Otanchatra
ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 117 ஏக்கர் நிலத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்திருந்தன.
இதைத் தொடர்ந்து இந்த இடத்தை துய்மைப்படுத்தி மரக்கன்றுகளை நட, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உலக சாதனை முயற்சியாக 4மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உட்பட 16,500 பேர் இணைந்து ஒரே நேரத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
நிறைவாக குறுங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைப் பூங்காவில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மா. மதிவேந்தன் ஆகியோரும் மரக்கன்றுகள் நட்டனர்.
பின்னர் நடந்த விழாவுக்கு ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். அப்போது 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்ததற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை அமெரிக்காவைச் சேர்ந்த எலைட் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவன நிர்வாக அதிகாரிகள் ரவி பால்பக்கி,நவுரா ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர்.
இதே போல், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக்ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய உலகசாதனை அங்கீகரிப்பு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும் சான்றிதழ்களை வழங்கினர்.
0 Comments