2022-23ம் நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் வரையிலான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் / Gross Domestic Product (GDP) growth rate of the country for July-September of the financial year 2022-23
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், '2022-23ம் நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாக உள்ளது.
கடந்த 2021-22ம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 8.4 சதவீதமாக ரூ.35.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.38.17 லட்சம் கோடியாக உள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜிடிபி 13.5 சதவீதமாக அதிகரித்து ரூ.64.95 லட்சம் கோடியாக இருந்தது. இதுவே முந்தைய 2021-22ம் நிதியாண்டில் அதே காலகட்டத்தில் ரூ.51.27 லட்சம் கோடியாக இருந்தது' என கூறப்பட்டுள்ளது.
0 Comments