2022 ஆம் ஆண்டுக்கான உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கொலம்பியாவின் பொகோடாவில் நடந்து வருகிறது. இதில், பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு களமாடி இருந்தார்.
தனது முழுத் திறனையும் வெளிப்படுத்திய அவர் மொத்தம் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். இந்த பிரிவில் மற்றொரு சீன வீரரான ஜியாங் ஹுய்ஹுவா, (206 கிலோ) எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
0 Comments