TAMIL
- தமிழகத்தில் முதல்முறையாக விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
- ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கரூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், அங்கீகரிக்கப்பட்ட 206 அரசு மருத்துவமனைகள் மற்றும் 403 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- இதில் சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- மருத்துவ காப்பீடு அட்டை உடையவர்கள் ,இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும், வயது வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயம் அடைவதற்கு முதல் 48 மணி நேரம் கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு மருத்துவ சிகிச்சை முறைக்கு, நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் வரையில் செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- On December 19, Chief Minister M.K.Stalin launched a program called "Pakumana 48" for free life-saving emergency treatment within 48 hours of an accident in Tamil Nadu.
- In the districts of Erode, Thanjavur, Villupuram, Vellore, Kanyakumari, Madurai, Trichy, Karur and Tirunelveli, a total of 609 hospitals, 206 recognized government hospitals and 403 private hospitals, have been connected on the basis of merit, and facilities have been provided to provide medical treatment.
- This project has been started considering that the first 48 hours after the accident is very important for those injured in road accidents.
- Free medical treatment for the first 48 hours of injury in road accidents within Tamil Nadu, regardless of age, with or without medical insurance card holders, non-state nationals, foreigners, and up to one lakh per person per medical treatment. It has also been reported.
0 Comments