உயர்சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் / 50% reservation for government doctors in higher medical courses in Tamilnadu - Supreme Court
தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்படிப்பில் 50% இடஒதுகீட்டை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு வழங்க தமிழக அரசால் ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2020 முதலாக இந்த வழக்கு தொடர்ச்சியாக விசாரணையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கலாம்.
ஒரு மாணவர்களுக்கு ரு.2 கோடி செலவு செய்யப்படுகிறது. இதில் பிற மாநிலங்கள் மாணவர்கள் வரும்போது அவர்களுக்கும் சேர்த்து செலவு செய்யப்படுகிறது. இதனால் தமிழக அரசிற்கு அதிக அளவில் செலவு ஏற்படுகிறது.
மேலும் தமிழகத்தை பொறுத்த வரை அரசுக்காக உழைக்கக்கூடிய மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கையாக உள்ளது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே கொடுத்த இடைக்கால உத்தரவின் படி இந்தாண்டும் மாணவர் சேர்க்கை அனுமதி வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
15 நாட்களில் மாணவர் சேர்க்கையை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 வது நாள் எத்தனை இடங்கள் நிரம்பாமல் உள்ளதோ அதனை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments