Recent Post

6/recent/ticker-posts

மத்திய காசநோய் பிரிவுடன் இணைந்து உத்தரப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தீவிர காசநோய் ஒழிப்புத் திட்டத்தை இந்தியன் ஆயில் தொடங்கியுள்ளது / Indian Oil has launched an intensive TB eradication program in Uttar Pradesh and Chhattisgarh in collaboration with the Central Tuberculosis Unit

  • காசநோய் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு வரலாற்று மைல்கல்லாக, தீவிர காசநோய் ஒழிப்பு திட்டத்தை மேற்கொள்ள, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய காசநோய் பிரிவு மற்றும் உத்தரபிரதேசம்,  சத்தீஸ்கர் மாநிலங்களுடன் இந்தியன் ஆயில் (இந்திய எண்ணெய்க் கழகம்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • நீடித்த  வளர்ச்சி இலக்கைவிட ஐந்து ஆண்டுகள் முன்னதாக, 2025 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் காசநோயை முடிவுக்குக் கொண்டுவரும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுப்படுத்துகிறது.
  • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி,  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.  
  • உலகில் ஆண்டுதோறும் 10 மில்லியன் பேரிடம் காச நோய்  தொற்றுவதாகவும், சுமார் 1.5 மில்லியன் பேர் இந்நோயால்  உயிரிழப்பதாகவும்  உலக அளவில் ஆண்டுதோறும்  காச நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கை இந்தியா கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel