Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவில் பேறுகால தாய், சேய் இறப்பு விகிதம் / MMR - IMR - MATERNAL & INFANT MORTALITY RATES IN INDIA

TAMIL

  • பேறுகால இறப்பு தொடர்பாக இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில், இந்தியாவின் பேறுகால இறப்பு விகிதம் குறைந்து இதில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மாதிரி புள்ளிவிவர பதிவு அடிப்படையில், 2014-16-ஆம் ஆண்டில் பேறுகால இறப்பு 130-ஆகவும், 2015-17-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 122-ஆகவும், 2016-18 காலகட்டத்தில் 113-ஆகவும், 2017-19 காலகட்டத்தில் 103-ஆகவும், 2018-20-ஆம் காலகட்டத்தில் 97-ஆகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேசிய சுகாதாரக் கொள்கையின் அடிப்படையில், 1 லட்சம் பிறப்புகளுக்கு பேறுகால இறப்பை 100-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதை இந்தியா எட்டியுள்ளது.
  • 2030-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் குழந்தை பிறப்புகளுக்கு பேறுகால இறப்பை 70-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா தற்போது செயல்படுகிறது.
  • நீடித்த வளர்ச்சி இலக்கை எட்டி மிகச் சிறப்பான முறையில் செயல்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது 6-லிருந்து 8-ஆக அதிகரித்துள்ளது. 
  • இந்த மாநிலங்களில் சராசரியை விட குறைவான பேறுகால இறப்பு விகிதம் உள்ளது. அதன்படி கேரளா 19, மகாராஷ்டிரா 33, தெலங்கானா 43, ஆந்திரா 45, தமிழ்நாடு 54, ஜார்க்கண்ட் 56, குஜராத் 57, கர்நாடகா 69 என்ற அளவில் பேறுகால இறப்பு விகிதம் உள்ளது.
  • 2014-ஆம் ஆண்டு முதல் தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், தரமான பேறுகால சிகிச்சையும், பராமரிப்பும் வழங்கப்படுகிறது. ஜனனி சிசு சுரக்‌ஷா கார்யக்ரம், ஜனனி சுரக்‌ஷா யோஜனா, சுரக்‌ஷித் மாத்ரித்வ ஆஷ்வாசன், பிரதமரின் சுரக்‌ஷித் மாத்ரித்வ அபியான் ஆகிய திட்டங்களும் பேறுகால இறப்பை குறைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.
  • லஷ்யா மற்றும் மருத்துவ தாதியர் முன்முயற்சிகளும் தரமான பேறுகால சிகிச்சைகளை ஊக்குவித்துள்ளன. 
  • பேறுகால இறப்பை குறைப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையில், நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஒருபகுதியாக 2030-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே பேறுகால இறப்பை 70-க்கும்கீழ் குறைத்து, மேலும் பாதுகாப்பான பேறுகால பராமரிப்பை வழங்கும் நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • In a special report issued by the Chief Registrar of India regarding perinatal mortality, it has been reported that India's perinatal mortality rate has decreased and further progress has been made.
  • Based on sample statistical record, perinatal mortality was 130 in 2014-16, 122 in 2015-17, 113 in 2016-18, 103 in 2017-19 and 103 in 2018-20. It is reported that it has also decreased to 97.
  • India has achieved the National Health Policy target of reducing perinatal mortality to below 100 per 1 lakh births. India is currently working towards a target of reducing perinatal mortality to below 70 per 1 lakh births by 2030.
  • The number of states that have performed exceptionally well in achieving the Sustainable Development Goals has now increased from 6 to 8.
  • These states have a lower than average perinatal mortality rate. According to Kerala 19, Maharashtra 33, Telangana 43, Andhra Pradesh 45, Tamil Nadu 54, Jharkhand 56, Gujarat 57, Karnataka 69.
  • Since 2014, quality antenatal care and care has been provided under the National Health Mission. Janani Sisu Suraksha Karyakram, Janani Suraksha Yojana, Surakshit Madritva Ashwasan and Prime Minister's Surakshit Madritva Abhiyan have also played a major role in reducing perinatal mortality.
  • Lashya and clinical nursing initiatives have also promoted quality antenatal care. While India has done well in reducing perinatal mortality, as part of the Sustainable Development Goals, it has been reported that India is working towards reducing perinatal mortality to below 70% by 2030 and becoming a country that provides safe perinatal care.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel