TAMIL
- தேசிய சிறுதொழில் கழகத்திற்கும் (என்எஸ்ஐசி) வால்மார்ட் குளோபல் சோர்சிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 6-ந் தேதி கையெழுத்தானது.
- என்எஸ்ஐசி-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு கௌரங் தீட்சித், வால்மார்ட் இயக்குனர் திருமிகு பிரமீளா மல்லையா ஆகியோர் மத்திய குறு சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் என்எஸ்ஐசி தனது திட்டங்கள் மற்றும் சேவைகளை, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பங்கேற்கும் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கமுடியும்.
- மேலும் எம்எஸ்எம்இக்கள் தொழில் நடுத்த தேவையான மூலதன நிதி, மொத்தக் கொள்முதல் ஆதரவு ஆகியவற்றையும் பெற முடியும்.
- 2030-ம் ஆண்டு வாக்கில் எம்எஸ்எம்இக்கள் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை மேற்கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கிய பங்காற்றும்.
- An MoU between National Small Industries Corporation (NSIC) and Walmart Global Sourcing India Pvt Ltd was signed on 6th. Chairman and Managing Director of NSIC Mr.Gaurang Dixit and Walmart Director Mr. Pramila Mallya signed the MoU in the presence of Union Minister for Small and Medium Industries Mr. Narayan Rane.
- Through this MoU, NSIC can offer its programs and services to MSMEs participating in various development projects.
- MSMEs can also get necessary capital financing and bulk procurement support to start their business. The MoU will also play a key role in enabling MSMEs to generate exports worth USD 2 trillion by 2030.
0 Comments