Recent Post

6/recent/ticker-posts

நம்ம ஸ்கூல் திட்டம் / NAMMA SCHOOL FOUNDATION SCHEME

TAMIL

  • ஒவ்வொரு பள்ளிக்கும், அந்தப் பள்ளியில் படித்தவர்கள் உதவ வேண்டும். இதேபோல ஒரு முன்னெடுப்பை தமழக அரசு சார்பில் மேற்கொள்ள உள்ளோம். 
  • அதோடு அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்த கலைத்திருவிழா, வானவில் மன்றம் என பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில் அரசுப் பள்ளிகளை மேலும் மேம்படுத்தும் வகையில், "நம்ம ஸ்கூல்" என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
  • இந்த திட்டமானது அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது நல்ல நிலைமைகளில் இருக்கும் முன்னாள் மாணவர்களின் உதவியோடு செயல்படுத்தப்படவுள்ளது.
  • இந்த திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • மேலும், இதற்கான இணையதளத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம், திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், எந்தப் பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். 
  • இவ்வாறு வழங்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் நிதி வழங்கியவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 
ENGLISH
  • For every school, people who studied in that school should help. We are going to take a similar initiative on behalf of the government. Apart from this, many programs like smart classes, art festival to showcase the individual talents of students and rainbow forum have been introduced in government schools.
  • In this situation, Chief Minister M.K.Stalin will launch a new program called "Namma School" in order to further improve the government schools. The scheme will be implemented with the help of ex-students who have studied in government schools and are currently in good standing.
  • Through this scheme, ex-students who studied in government schools and are currently holding high positions in various organizations, ex-students who are businessmen, socially concerned organizations and corporate social responsibility funds adopt government schools, build perimeter wall, paint, internet facility, sanitary toilets, laboratories. , basic facilities like libraries will be improved.
  • Also, Chief Minister Stalin will launch a website for this purpose. Through this, those who want to participate in the program can donate to any school.
  • The website has been developed so that donors can know whether the funds provided are properly utilized.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel