ஹவுரா- நியூஜல்பைகுரி இடையே வந்தே பாரத் ரயிலை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் / PM inaugurated Vande Bharat train between Howrah-New Jalpaiguri through video
ஹவுரா- நியூஜல்பைகுரி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மேற்கு வங்கத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டத்தையும் பிரதமர் மோடி நேரில் தொடங்கி வைக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால், எதிர்பாராதவிமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு குஜராத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர் மோடியின் தாய் ஹீராபென்(100) நேற்று அதிகாலை இறந்தார். இதனால் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று அதிகாலை குஜராத் புறப்பட்டு சென்றார்.
அதன்படி தாயார் இறுதிச்சடங்கில் பங்கேற்ற சிறிது நேரத்தில் ஹவுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்துகொண்டார். மேற்குவங்க ஆளுநர் ஆனந்தா போஸ், முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டனர்.
0 Comments