2020 -21ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வளழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
கற்றல் கற்பித்தல், தலைமைத்துவம், ஆசிரியர் திறன் மேம்பாடு ஆகிய பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
0 Comments