Recent Post

6/recent/ticker-posts

எடப்பாடி பழனிசாமி கால ஆட்சி திட்டங்கள் / SCHEMES OF EDAPPADI PALANISAMY REGIMES

 

IMPORTANT SCHEME INTRODUCED BY EDAPADI PALANISAMY 
AWARDS & IMPORTANT SCHEME OF EDAPADI PALANISAMY 
  • ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிய பழனிசாமி, அவர் கொண்டுவந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அத்துடன், பல புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி, மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். 
  • குறிப்பாக, குடிமராமத்து திட்டம், மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள், ரூ.1,000 பொங்கல் பரிசு, டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு என்பது போன்ற முதல்வரின் திட்டங்கள், மக்களை அவர் பக்கம் திரும்பச் செய்துள்ளது.
  • பள்ளி மாணவ, மாணவியர் இடை நிற்றலை தடுக்க ரூ.5,822 கோடியில் இலவச சீருடை, மடிக்கணினி உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 
  • கல்வி தொடர்பான அனைத்து தகவல் களையும் தெரிந்து கொண்டு மாணவர்கள் பயன்பெற அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
  • கடந்த 2015-ல் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்திய ஜெயலலிதா, ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கான முதலீடுகளை ஈர்த்தார். 
  • அதேவழியில், 2019 ஜனவரியில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தலைமையேற்று நடத்திய முதல்வர் பழனிசாமி, ரூ.3 லட்சத்து 431 கோடி அளவுக்கான முதலீடு தமிழகத்துக்கு வர வாய்ப்பு ஏற்படுத்தினார்.
  • முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த 3 ஆண்டுகளில் 16,382 கோப்பு களில் கையெழுத்திட்டு, பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
  • ஒட்டுமொத்த செயல்திறன் மிக்க முதன்மை மாநிலமாக இந்தியா டுடே ஆய்வில் இரண்டாவது முறையாக தமிழ்நாடு தேர்வு.
  • கிருஷி கர்மான் விருதினை 5 முறை பெற்று சாதனை
  • உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5 வருடங்களாக மிகச் சிறந்த மாநிலத்திற்கான விருது
  • இணையு வழிகற்றலில் முன்னோடி மாநிலத்திற்கான தேசிய விருது
  • மூத்த குடிமக்கள் சேவைக்காக தேசிய விருது
  • சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு உடல் உறுப்பு தானத்திற்கு சிறப்பு விருது
  • புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித்துறைக்கு விருது
  • உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய விருது
  • ஊராட்சிகளில் மின் ஆளுமை வலிமைப்படுத்துதல், குழந்தைகள் நேயம், வலுவான கிராம சபை செயல்பாட்டிற்கென 12 தேசிய விருதுகள்
  • பெங்களூருவில் உள்ள பொது விவகாரங்கள் மையத்தின் அறிக்கையில் நல் ஆளுமை இல் இரண்டாவது சிறந்த மாநிலமாக தேர்வு
  • ஃபிராஸ்ட் அண்ட் சல்லிவன் (Frost & Sullvan) நிறுவன ஆய்வறிக்கையில் ஒட்டு மொத்த செயல்பாட்டில் இரண்டாம் இடத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழ்நாடு பெற்றுள்ளது.
  • தாய்மார்கள் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக மத்திய அரசின் விருது
  • தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் தரவரிசையில் இந்தியாவில் முதலிடம்
  • பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்திற்காக  மத்திய அரசின் விருது
  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு "சிறந்த மேலாண்மைக்கான" மத்திய அரசின் விருது
  • தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு  சிறந்த மாநில விருது
  • சாலை பாதுகாப்பில் சிறந்த செயல்பாட்டிற்கான மத்திய அரசின் விருது
  • போக்குவரத்து கழகங்களின் சிறந்த செயல்பாட்டுத் திறனுக்காக 9 விருதுகள்
  • உயர் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்
  • பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையத்திற்கு தென் மண்டலத்திற்கான தேசிய காமதேனு விருது
  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு முதுநிலை விருது
  • 2018ம் ஆண்டிற்கு மத்திய அரசின் தேசிய நீர் ஆதார விருது
  • 2018ம் ஆண்டிற்கு மத்திய அரசின் தூய்மையான நகரத்திற்கான கவச் சர்வக்ஷன் விருது
  • மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் “தூய்மையான புனித தலம்" விருது
  • பழமை மாறாமல் திருப்பணி மேற்கொண்டதற்காக ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு யுனெஸ்கோ விருது
  • பொது விநியோக திட்டத்தை கணினிமயமாக்கியமைக்கு விருது
  • ஊரக வளர்ச்சித்துறையின் சிறப்பான செயல்பாட்டிற்காக 9 தேசிய விருதுகள்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 4 தேசிய விருதுகள்
  • மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கடனுதவி வழங்கிய தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு தேசிய விருது
மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல் 2019 - 2020 / LIST OF STATE RANK OF INDA 2019 – 2020
  • தேசிய நல்லாட்சி தினத்தை ஒட்டி, மத்திய நிர்வாக சீா்திருத்தம் மற்றும் பொது மக்களின் குறைதீா்க்கும் துறையானது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தது.
  • ஒவ்வொரு மாநிலத்திலும் பொது மக்களுக்கு நலத் திட்டங்களை அளிக்கக் கூடிய 17 அரசுத் துறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புள்ளிகளை வழங்கியுள்ளது. இந்தப் புள்ளிகளைக் கொண்டு மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன்கள், வேளாண்மை, துணைத் தொழில்கள், வா்த்தகம் மற்றும் தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலம் மற்றும் வளா்ச்சி, நீதி நிர்வாகம் - பொது மக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை ஒவ்வொரு மாநில வாரியாக ஆய்வு செய்யப்பட்டன.
  • பெரிய மாநிலங்கள் என்ற பிரிவில் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கி தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
  • அதில், உள்கட்டமைப்பு, நீதி நிர்வாகம், சுகாதாரம் என அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 5.62 புள்ளிகளைப் பெற்று சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • குடிநீா் வசதி, கிராமங்கள் மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் மலம் கழிப்பதைத் தடுத்தது, தடையில்லாத மின்சார விநியோகம், புகா்ப் பகுதிகளை அணுகுவதற்கான அம்சங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சிறப்பாக இருப்பதாக மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ளது.
  • இதற்காக பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடு என்ற பிரிவில் மாநில அரசுக்கு 0.74 புள்ளிகளை அளித்து முதலிடத்தை வழங்கியுள்ளது.
  • சட்டம், ஒழுங்கைப் பராமரித்து பொது மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதிலும் தமிழகத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றங்களை நிரூபணம் செய்வது, காவலா்கள் எண்ணிக்கை, மகளிா் காவலா்களின் விகிதம், நீதிமன்றம் மற்றும் நுகா்வோா் நீதிமன்ற வழக்குகளில் தீா்வு அளிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் தமிழகத்துக்கு 0.56 புள்ளிகள் அளிக்கப்பட்டு இந்தியாவிலேயே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
  • கா்ப்ப காலத்தில் தாய்- சேய் இறப்பு விகிதம், நோய்த் தடுப்பில் சாதனை, பொது சுகாதார மையங்களில் மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்களின் இருப்பும், மருத்துவமனைகள் 24 மணி நேரமும் இயங்கும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கான சுகாதாரத் துறை அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதில், தமிழகத்துக்கு 0.78 புள்ளிகள் அளிக்கப்பட்டதன் மூலம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
  • ஒருமுறை தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகளுக்கான தடை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மாநில அளவிலான செயல்திட்டம், வனஎல்லை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் துறையில் சிறப்பான செயல்பாடுகளுக்காக இந்தியாவிலேயே தமிழகத்துக்கு 3-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
  • கல்வி அளிப்பதுடன் சிறப்பான திறன் பயிற்சி மூலமாக வேலை வாய்ப்பு அளிக்கும் மனிதவள மேம்பாடுத் துறைக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளா்ச்சி விகிதம், நிதி மற்றும் கடன் சுமைகளை கட்டுக்குள் வைத்திருத்தல் போன்ற காரணிகளால் பொருளாதார மேலாண்மைத் துறைக்கும் ஐந்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
  • சமூக நலன் மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு 7-ஆவது இடமும், வேளாண்மை மற்றும் அதனைச் சாா்ந்த துறைகளுக்கு 9-ஆவது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்துத் துறைகளுக்கும் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் சராசரி அடிப்படையில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது.
  • மத்திய அரசு வெளியிட்டுள்ள, நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
  • அதற்கடுத்த இடங்களில், மஹாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்கள் உள்ளன. மத்திய பணியாளர் நலத்துறை சார்பில், மிகச் சிறந்த மாநிலங்களுக்கான தரவரிசை தயாரிக்கப்பட்டு உள்ளது.
  • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனமிகப் பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேசங்கள், யூனியன் பிரதேசங்கள் என, மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளனஒவ்வொரு பிரிவுக்கும், தனித்தனியாக மதிப்பீடுகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில், மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்தும் பட்டியலிடப் பட்டுள்ளன.
  • ஒட்டுமொத்தமாக, சிறந்த நிர்வாகம் அளிக்கும், மிகப்பெரிய மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது; மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன; சத்தீஸ்கர், நான்காவது இடத்தில் உள்ளது.
  • அதற்கடுத்த இடங்களில், ஆந்திரா, குஜராத், ஹரியானா, கேரளா உள்ளன; மத்திய பிரதேசம், 10வது இடத்தில் உள்ளது. தெலுங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, பீஹார், கோவா, உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட், அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.
  • வடகிழக்கு மற்றும் மலை பிரதேசங்களில், ஹிமாச்சல பிரதேசம், முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில், உத்தரகண்ட், திரிபுரா, மிசோரம், சிக்கிம், அசாம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளன.மிகச் சிறந்த நிர்வாகம் அளிக்கும், யூனியன் பிரதேசங்கள் பட்டியலில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. சண்டிகர், டில்லி, டாமன் மற்றும் டையூ, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, லட்சத்தீவுகள், அதற்கடுத்த இடங்களில் உள்ளன.துறை வாரியாக செயல்பாடு: பல்வேறு துறைகளில், ஒவ்வொரு மாநிலத்தின் செயல்பாடுகள் குறித்தும் பட்டியலிடப் பட்டுள்ளது.
  • வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில், மத்திய பிரதேசம், முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், அதற்கடுத்த இடங்களில் உள்ளன.
  • வடகிழக்கு மாநிலங்களில், மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்களில், டாமன் மற்றும் டையூ, முதலிடத்தைப் பிடித்தன.வர்த்தகம் மற்றும் தொழில் துறையில், ஜார்க்கண்ட், முதலிடம் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், உத்தரகண்ட்; யூனியன் பிரேதசங்களில், டில்லி முதலிடத்தைபிடித்துள்ளன.
  • மனிதவள மேம்பாட்டில், கோவா முதலிடம் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாச்சல பிரதேசம், யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளன.
  • மருத்துவ வசதியில், கேரளா, முதலிடத்தில் உளளது. தமிழகம் மற்றும் கோவா, அதற்கடுத்த இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரியும், வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரும், இதில் முதலிடத்தில் உள்ளன.பொது கட்டமைப்பு வசதிகளிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  • இதில், குஜராத், பஞ்சாப், அதற்கடுத்த இடங்களில் உள்ளன.வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாச்சல பிரதேசம்; யூனியன் பிரதேசங்களில், சண்டிகர் முதலிடத்தில் உள்ளன.
  • நிதி நிர்வாகப் பிரிவில், கர்நாடகா, முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், தமிழகம் அதற்கடுத்த இடங்களில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் உத்தரண்ட்; யூனியன் பிரதேசங்களில், டில்லி, முதலிடத்தைப்பிடித்துள்ளன.
  • சமூக நலம் மற்றும் மேம்பாட்டு பிரிவில், சத்தீஸ்கர், முதலிடத்தைப் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயாவும், யூனியன் பிரதேசங்களில் டாமன் மற்றும் டயூவும், முதலிடத்தைப் பிடித்தன.
  • நீதி நிர்வாகம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரிவில், தமிழகத்துக்கு, முதலிடம் கிடைத்துள்ளது. கேரளா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், அதற்கடுத்த நிலைகளில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாசலப் பிரதேசம்; யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளன.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பில், மேற்கு வங்கம், முதலிடத்திலும், கேரளா, தமிழகம், அதற்கடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. வடகிழக்கு மற்றும் மலை பிரதேச மாநிலங்களில், ஜம்மு - காஷ்மீர்; யூனியன் பிரதேசங்களில் சண்டிகர், முதலிடத்தைப் பிடித்தன.
'நிடி ஆயோக்' வளர்ச்சி பட்டியல் / NITI AYOG GROWTH RANK OF STATES IN INDIA 2019
  • 'நிடி ஆயோக்' அமைப்பு வெளியிட்ட, எஸ்.டி.ஜி., இன்டெக்ஸ் என்ற, நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டிய மாநிலங்களுக்கான பட்டியலில், கேரளா முதலிடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • வரும், 2030க்குள் சர்வதேச நாடுகள், வறுமை ஒழிப்பு, பட்டினி இன்மை, தரமான கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம், சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட, 17 இலக்குகளை எட்டுவது குறித்த வரையறைகளை, ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ளது.
  • பீஹார் பின்னடைவு இவற்றில், 16 இலக்குகளை அடிப்படையாக வைத்து, இந்த ஆண்டில், நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எந்த மாதிரியான வளர்ச்சியை எட்டியுள்ளன என்பது குறித்த பட்டியலை, மத்திய அரசுக்கு, நிதி தொடர்பான ஆலோசனைகளை கூறும் நிடி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • இந்த பட்டியலில், கடந்தாண்டை போலவே, இந்தாண்டும், கேரள மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹிமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
  • தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.இந்த பட்டியலில், பீஹார், ஜார்க்கண்ட், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள், மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. உத்தர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்கள் இந்தாண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளன.
  • யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை, சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.வறுமையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் தமிழகம், திரிபுரா, ஆந்திரா, மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
உள்ளாட்சித் துறைக்கு ஒரே ஆண்டில் 12 தேசிய விருதுகள் / TAMILNADU GOT 12 AWARDS FROM CENTRAL GOVERNMENT
  • உள்ளாட்சியில் நல்லாட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக அரசின் உள்ளாட்சித் துறையின் செயல்பாடுகளால் அந்தத் துறைக்கு மட்டும் கடந்த ஆண்டில் 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • மத்திய அரசு சாா்பில் ஊரக வளா்ச்சித் துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • இதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 12 தேசிய விருதுகளுக்குத் தமிழக ஊரக வளா்ச்சித் துறை தோந்தெடுக்கப்பட்டது.
  • மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிகளை விரைவாக முடித்ததற்காகவும், நீா் மேலாண்மைப் பணியைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகவும் இரண்டு தேசிய விருதுகள்.
  • இத்திட்டத்தின்கீழ், நீா் கட்டமைப்பை உருவாக்கியதற்காக வேலூா் மாவட்டத்துக்கு இரண்டு தேசிய விருதுகளும், தொழிலாளா்களுக்கு உரிய காலத்துக்குள் ஊதியம் அளித்ததற்காக திருச்சி மாவட்டத்துக்கு முதலிடத்துக்கான தேசிய விருது, சிறந்த செயல்பாட்டுக்காக கரூா் மாவட்டத்துக்கு தேசிய அளவில் 2-ஆம் இடத்துக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளன.
  • ஊராட்சி ஒன்றிய அளவில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின்கீழ் தொழிலாளா்களுக்கு குறித்த காலத்துக்குள் ஊதியம் வழங்கியதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், புனிததோமையா் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு முதலிடத்துக்கான தேசிய விருதும், கிராம ஊராட்சி அளவில் இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட செலுகை கிராம ஊராட்சிக்கும், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் செயல்பட்டு வரும் மாநில ஊரக வளா்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்துக்கும் தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும், மத்திய அரசின் ரூா்பன் திட்டம் மற்றும் தீன தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழும் தலா ஒரு தேசிய விருது என மொத்தம் 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • அதுமட்டுமில்லாமல், மத்திய அரசின் சாா்பில் மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் ஊராட்சிகளில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப முறைகளைத் திறம்பட செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகம் முதல் மாநிலமாகத் தோவு செய்யப்பட்டு அதற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.
சமூக பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் சிறப்பு: நிதிஆயோக் பாராட்டு
  • சமூக-பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது என்று நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
  • மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மத்திய திட்டக்குழுவுக்கு மூடுவிழா நடத்திவிட்டு நிதிஆயோக் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினார்.
  • இதில் நிதி (NITI – National Institution for Transforming India) என்பதன் பொருளாகும். இந்த அமைப்பு கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி யிலிருந்து செயல்பட்டு வருகிறது.
  • இந்த அமைப்பு அவ்வப்போது நாட்டின் நிதி முதலீடு, தொழில் வளர்ச்சி, முதலீடு போன்றவை குறித்து ஆய்வுகள் நடத்தி ஆலோசனைகளை கூறி வருகிறது.
  • தற்போது நாட்டிலுள்ள மாநிலங்களின் சமூக பொருளாதார குறியீடுகள் குறித்த அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பசியை தீர்ப்பதில் சிறப்பாக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இலவச திட்டங்கள் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்து அது குறித்த விவாதங்கள் நடந்து வரும் வேளையில் அரசின் இலவச உணவு திட்டங்கள் போன்றவையால் தமிழகத்தில் சமூக பொருளாதாரம் வளர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையுடன் மத்திய அரசு இணைந்து தயாரித்த 2018 சமூக-பொருளாதார குறியீட்டு அறிக்கையில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்து உள்ளது.
  • அத்துடன், கேரளா, ஹிமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவை சிறப்பாக செயல்பட்டுள்ளதாக வும் தெரிவித்துள்ளது.
  • குறிப்பாக கேரளாவில் நல்ல சுகாதாரம், கல்வி வழங்கி, பசியைக் குறைத்து பாலின சமத்துவத்தை அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
  • இந்த குறியீட்டில் அசாம், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மோசமாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 - 17ம் கல்வி ஆண்டுக்கான தேசிய அளவிலான பள்ளிக்கல்வித் தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2வது இடம்
  • நாட்டில் உள்ள மாநிலங்களின் கல்வித்தரத்தை ஆய்வு செய்து நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் வசதிகள், ஆசிரியர் - மாணவர் விகிதம் உள்ளிட்ட 44 காரணிகளை அடிப்படையாக கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • 2016 - 17ம் கல்வி ஆண்டுக்கு வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில், 76.6% மதிப்பெண் பெற்ற கேரளா முதலிடம் பிடித்துள்ளது.
  • 73.4% மதிப்பெண் பெற்ற தமிழகத்துக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. 2015 - 16ல் தமிழகம் 63.2% மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தது.
  • காஷ்மீருக்கு 16வது இடம் 36.4% மதிப்பெண் பெற்றுள்ள .பி., கடைசி இடம் பிடித்துள்ளது. அதற்கு முந்தைய இடங்களை பீகார், ஜார்கண்ட் மாநிலங்கள் பிடித்துள்ளன.
  • 3வது இடத்திலிருந்த மஹாராஷ்டிரா தற்போது 6வது இடத்திற்கும், 5வது இடத்திலிருந்த கர்நாடகா 13வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன.
  • ஆந்திரா 11வது இடத்திலும், காஷ்மீர் 16வது இடத்திலும் உள்ளன. மதிப்பீடு செய்ய மறுப்பு தெரிவித்த மேற்கு வங்க மாநிலம் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை,
மூன்றாம் இடத்தில் தமிழ்நாட்டின் சுகாதாரக் குறியீடு
  • தமிழ்நாட்டின் சுகாதாரக் குறியீடானது கேரளா பஞ்சாப் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பச்சிளங் குழந்தை இறப்பு வீதம் 14 ஆகும். 
  • இது பிற மாநிலங்கள் காட்டிலும் மிகக் குறைவு. மேலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு வீதம் 2011ல் 21 ஆகவும், 2015-ல் 20 ஆகவும் குறைந்துள்ளது.
விருதுகள் / AWARDS
  • தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஊரக தூய்மைப் பணியில் மாநிலத்துக்கான விருது, பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்துக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மத்திய அரசிடம் இருந்து தமிழகம் பெற்றுள்ளது. இதுபோன்ற பல மக்கள் நல திட்டங்களால் மகத்தான சாதனை படைத்துள்ளது முதல்வர் பழனிசாமியின் அரசு.
  • State Award for Rural Cleanliness under Swachh Bharat Scheme, Let's Save the Girl Child; Tamil Nadu has received various awards from the central government, including the award for the Teach Girls Project. Chief Minister Palaniswami's government has made great achievements with many such welfare schemes.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel