Recent Post

6/recent/ticker-posts

கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் / SCHEMES OF KALAIGNAR KARUNANITHI REGIMES

  • தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கப்பட்டது.
  • உழவர் சந்தை (தமிழ்நாடு) / UZHAVAR SANTHAI (TAMILNADU)
  • பண்ணை உற்பத்தி அமைப்பு மற்றும் குறு நிறுவனங்களின் திட்டம் / FARM PRODUCTION SYSTEM & MICRO ENTERPRISES SCHEME
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் / CHIEF MINISTER'S COMPREHENSIVE HEALTH INSURANCE SCHEME
  • இந்திர தனுஷ் திட்டம் / INDRA DHANUSH SCHEME
  • ‘104’ மருத்துவ சேவை / 104 MEDICAL SERVICE
  • பொது விநியோக திட்டம் / PUBLIC DISTRIBUTION SYSTEM
  • தமிழ்நாடு அரசின் வீட்டுத் திட்டங்கள் / TAMILNADU GOVERNMENT HOUSING SCHEME
  • ஜமாபந்தி / JAMABANDHI
  • கிராம தன்னிறைவுத் திட்டம் / VILLAGE SELF SUFFIENCY SCHEME
  • இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகள் வழங்கல் திட்டம் / Scheme for supply of free cooking gas connections and gas stoves
  • புது வாழ்வு திட்டம் / PUTHU VAZHVU SCHEME
  • பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் / PERIYAR MEMORIAL SAMATHUVAPURAM PROJECT
  • கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் அல்லது நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் / KALAIGNAR NAGARAPURA MEMBATTU THITTAM (URBAN INFRASTRUCTURE DEVELOPMENT SCHEME)
  • சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் / SATHIYAVANIMUTHU AMMAIYAR NINAIVU FREE SUPPLY OF SEWING MACHINE SCHEME
  • அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் / Mother Teresa Memorial Destitute Women Marriage Assistance Scheme
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் / DR.MUTHULAKSHMI REDDY MEMORIAL INTERMARRAIGE ASSISTANCE SCHEME
  • டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் / DR.MUTHULAKSHMI REDDY MATERNITY FUND SCHEME
  • டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் / DR. DHARMAMBAL AMMAIYAR MEMORIAL WNDOW REMARRIAGE FUNDING SCHEME
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் / MUVALUR RAMAMIRTHAM AMMAIYAR MEMORIAL MARRIAGE ASSISTANCE SCHEME
  • ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் / OKENAKAL JOINT WATER PROJECT
  • மகளிர் சுய உதவி குழுக்கள் / WOMEN SELF HELP GROUPS
  • வாழ்ந்து காட்டுவோம் திட்டம் / VAAZHNDHU KATTUVOM PROJECT
  • தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் / TIIC - TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION LTD 
  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் / TAMILNADU STATE RURAL LIVELIHOODS MOVEMENT
  • தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் / TAMIL SOFTWARE INCUBATION CENTER
  • செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் / SENTAMIZH ETYMOLOGY PROJECT DIRECTORATE
  • அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் / UNORGANIZED LABOURWELFARE BOARDS
  • கை ரிக்சாவின் பயன்பாடு ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்சா அளிக்கப்பட்டது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் ரிக்சாவில் வைத்து தள்ளிச் செல்லும் முறையை ஒழித்தார்.
  • சின்னஞ்சிறு கிராமங்களுக்கும் கூட சாலை வசதிகள் உருவாக்கப்பட்டது. தனியார் வசம் சிக்கியிருந்த போக்குவரத்துத் துறை அரசுடமையாக்கப்பட்டது.
  • சிப்காட் தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டது.
  • சிட்கோ தொழில் வளாகங்கள் கொண்டுவரப்பட்டது
  • மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டது
  • சேலத்தில் உருக்காலை கொண்டு வரப்பட்டது
  • தமிழக கிராமங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி உருவாக்கப்பட்டது
  • தடையற்ற மின்சாரம் கிடைக்க 8 இடங்களில் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டது
  • தமிழகம் வளர்ச்சியின் பாதையில் செல்ல கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்
  • 1997ல் தரமணி டைடல் பார்க் தகவல் தொழில் நுட்பதிற்கென புதுக் கொள்கைகள் உருவாக்கப்பட்டது.
  • 14,600 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ திட்டம் கலைஞர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதாகும்
  • 108 ஆம்புலன்ஸ் சேவைகள் கருணாநிதியின் ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது
  • குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டு நகரங்களில் இருந்து குடிசைகள் அனைத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளாக உருப்பெற்றன. 2010ம் ஆண்டு கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம் தமிழகத்தில் எங்குமே குடிசைகள் இருக்கக் கூடாது என்ற காரணத்தால் உருவாக்கப்பட்டது.
  • சென்னையில் அதிக அளவு கார் தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழகத்தின் பொருளாதரத்தில் ஒரு மைல் கல்லை அடைய வைத்த பெருமை கருணாநிதிக்கு உண்டு. அதனால் தான் சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் என்று அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • மினிபஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் உருவாக்கப்பட்டது.
  • தமிழக காவல்துறையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.
  • மே 1ம் தேதி ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
  • அரசு ஊழியர்கள் உயிர் இழக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கும் பழக்கம் ஆகியவற்றையும் கூட கருணாநிதி கொண்டுவந்தார்.
  • விவசாயத்திற்கு இலவச மின்சாரம் (இந்தியாவிலேயே இது போன்ற திட்டம் உருவாக்கப்பட்டது அப்போது தான்)
  • உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு விளைபொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்த்தவர் கலைஞர் கருணாநிதி.
  • விவசாயிகளுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது.
  • விவசாயக் கூலிகளுக்கு சம்பள நிர்ணயம் கொண்டு வரப்பட்டது
  • கிராமப்புற வளர்ச்சிக்கென நமக்கு நாமே திட்டம் உருவாக்கப்பட்டது. அரசு மானியத்துடன் தங்களின் தேவைகளே தாங்களே பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அறிமுகமாக்கப்பட்டது.
  • கிராமப்புற மேம்பாட்டிற்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • திமுக கட்சியின் மூத்த பெண் தலைவர் மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் நினைவாக ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம்
  • கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தவர் கலைஞர் கருணாநிதி.
  • அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
  • சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • பெண்களுக்கான இலவசப் பட்டப் படிப்பிற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
  • 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு மிகவும் வெற்றி கரமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
  • கர்பிணிப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.
  • ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டது.
  • 1989ல் பெண்களுகள் பொருளாதாரத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது பெண்கள் சுய உதவிக் குழுக்கள். இதன் மூலம் தமிழகத்தில் பெண்களால் சுய தொழில்கள் அதிகம் உருவாகின.
  • இந்தியாவின் இறுதிப் புள்ளி அல்லது மறுமலர்ச்சி இந்தியாவின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் தமிழகத்தின் தென் முனையில் அய்யன் வள்ளுவனுக்கு வைக்கப்பட்டது 133 அடி உயரமுள்ள சிலை.
  • ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாராத்தினை பெற்றுக் கொடுத்துவர் கருணாநிதி.
  • கோவையில் மிக பிரம்மாண்டமாய் தமிழ் அறிஞர்கள் படை சூழ வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது செம்மொழி மாநாடு.
  • சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு தமிழர் கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
  • தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயரிட்டார்
  • சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டாலும் தைத்திருநாளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது
  • மெட்ராஸ் மாகாணம் அண்ணாவின் உழைப்பால் தமிழ் நாடு என்றானது. கலைஞரின் முயற்சியால் மெட்ராஸ் சென்னை என்றானது
  • மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து 1970களில் இருந்து அனைத்துவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் பாடப்பட்டது.
  • ஆளுநர்கள் இல்லாமல் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் போன்ற நாட்களில் மாநில முதல்வர்கள் கொடியேற்ற வழிவகை செய்தவர் கலைஞர்.
  • தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் 20% இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி.
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவிப்பினை வெளியிட்டவர் கருணாநிதி.
  • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான கல்வி தொகை உயர்த்தப்பட்டது. அவர்களுக்கான விடுதிகள் அதிகமாக திறக்கப்பட்டன.
  • பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது
  • அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து வாழும் வகையில் சமத்துவபுரங்கள் தமிழகமெங்கும் உருவாக்கப்பட்டன
  • இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5% இட ஒதுக்கீட்டினை அளித்தார்
  • உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தார்.
  • ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்பட்டது
  • கலப்புத் திருமணங்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டது. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை தந்து கௌரவம் செய்தது திமுக அரசு
  • பொறியாளர் பட்டப்படிப்பிற்காக நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்யப்பட்டது.
  • மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டது.
  • அதிமுக அல்லது திமுக என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் காமராஜரால் கொண்டுவரப்பட்ட மத்திய உணவுத்திட்டத்தினை ஒரு போதும் நிறுத்தியது கிடையாது. 2006ம் ஆண்டு ஆட்சியின் போது மாணவர்களுக்கு மத்திய உணவில் வாரம் இரண்டு முட்டை தந்து சிறப்பு ஆணை வெளியிட்டார்.
  • மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது.
  • தமிழகத்தில் அதிக அளவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டது.
  • நெல்லையில் மனோன்மணியம் பல்கலைக்கழகம் தொடங்கி, சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம், சென்னையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழங்கள் கட்டப்பட்டது.
  • நில விற்பனை வரையறை சட்டம்
  • பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம்
  • தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கான ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது
  • தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தினை நிறுவியவர் கலைஞர் கருணாநிதி
  • பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்கள் இவரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது
  • ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டத்தினை கொண்டுவந்தார்
  • ரேசன் கடைகளில் ஒரு கிலோ அரிசியினை 2 ரூபாய்க்கும் பின்னர் 1 ரூபாய்க்கும் விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
  • மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அல்லது கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
  • மக்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பின்னர் இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது
  • அரவாணிகள் என்று அழைக்கப்பட்ட மூன்றாம் பாலித்தினவர்களுக்கு திருநங்கைகள் திருநம்பிகள் என்று பெயர் சூட்டி அவர்களுக்கான தனி நல வாரியம் அமைக்கப்பட்டது.
  • நாட்டுப்புற கலைஞர்களுக்கான நலவாரியத்தினையும் அமைத்துக் கொடுத்தது திமுக தலைமை
  • போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டது
  • சுதந்திரந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்தது
  • ஏழை மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் இவரது ஆட்சியில் இருந்து தான் தரப்பட்டது.
  • சீரான போக்குவரத்து வசதிகளை மக்கள் அடைய நான்கு வழிச் சாலைகள் அதிகம் உருவாக்கப்பட்டன.
  • போக்குவரத்துத் துறையை அரசுடமையாக்கியது மற்றுமின்றி அதற்கென துறையை உருவாக்கியவர் கலைஞர்
  • நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டது.
  • உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அம்பேத்கர் பெயரில் சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது
  • இஸ்லாமியர்களுக்காக உருது அகாதெமி உருவாக்கப்பட்டது.
  • தேர்வுகளில் மாவட்ட மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவித் தொகை வழங்கி சிறப்புச் செய்தவர் கருணாநிதி
  • சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சுமார் 23 மேம்பாலங்கள் கட்டப்பட்டது.
  • ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • மாவட்டங்களுக்குள் நதி நீர் இணைப்பு சாத்தியப்படுத்தப்பட்டது.
  • காமராஜரின் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு நாளாக அறிவித்தவர்
  • 420 பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டது
  • ராமநாதபுரம் – பரமக்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது
  • மாலை நேரம் மற்றும் விடுமுறை தின நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது.
  • மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை நிறுவப்பட்டது.
  • ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
  • இவர் ஆட்சியின் கீழ் 12 அரசு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.
  • பேருந்து போக்குவரத்துக் கட்டணம், பால் விலை, மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை உயர்த்தப்பட்டது கிடையாது
  • இலவச வண்ண தொலைக்காட்சிகளை கொடுத்தார்
  • உணவுப் பொருட்களை மலிவு விலையில் ரேசன் கடைகளில் இருந்து பெற்றுக் கொள்ளும் படி புதிய அறிவிப்புகளை எப்போதும் வெளியிடுவார் கருணாநிதி.
  • 10 வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டது
  • சுயமரியாதை என்ற பெயருக்கு சொந்தக்காரராய் என்றும் நிலைத்து நிற்கும் கருணாநிதி சுயமரியாதை தமிழகத்தை தமிழர்களுக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel