Recent Post

6/recent/ticker-posts

பள்ளி இல்ல நூலகம் திட்டம் / SCHOOL HOME LIBRARY SCHME

TAMIL

  • பள்ளிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாசிக்கும் திறன், கற்றல் திறன், விமர்சனம் எழுதுதல், பேச்சுத்திறன், வரைதல் மற்றும் குறு நாடகம் ஆகிய திறன்களை வளர்த்திடும் வகையில் பள்ளி நூலகங்களிலிருந்து கதை, கவிதை, நாடகம், கட்டுரை, வரலாறு, இலக்கியம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களைப் பெற்று வீட்டிலும் விரும்பி வாசித்துப் பயன்பெறும் வகையில் 'பள்ளி இல்ல நூலகமானது' கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது
  • பள்ளி இல்ல நூலகம் திட்டத்தின் மூலம் சென்னைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் புத்தகங்களை இல்லங்களுக்கு எடுத்துச் சென்று விரும்பி வாசிக்கும் திறனை அதிகரிக்க, அதாவது 100 சதவீதம் பூர்த்தியடையும் வகையில் மாணவர்களை ஊக்கப்படுத்தி இந்த திட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தை அடையும் பொருட்டு முனைப்புடன் செயல்பட ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு, அதன்படி இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • ஒவ்வொரு வாரமும் அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி நூலகங்களில் புத்தகங்களை மிகவும் விரும்பிப் பெற்று பயனடையும் மாணவர்களின் விவரங்கள் பெறப்படுகின்றன. 
  • அதனடிப்படையில், இந்தப் பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின் மூலம் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் 12,256 மாணவ, மாணவியரும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 13,324 மாணவ, மாணவியரும் புத்தகங்களை மிகவும் விரும்பிப் பெற்று இல்லங்களுக்கு எடுத்துச் சென்று வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தி பயனடைந்துள்ளனர்.
ENGLISH
  • In order to develop the reading ability, learning ability, critical writing, speaking ability, drawing and short drama skills of students studying in schools from 4th to 12th standard, get various books including story, poetry, drama, essay, history, literature, general knowledge from school libraries and like them at home. The 'School House Library' has been functioning since last August for the benefit of reading
  • Through the school home library program, teachers and headmasters have been advised to work diligently to achieve the purpose of this program to increase the ability of all the students studying in Chennai schools to take books home and increase their reading ability, i.e. 100 percent completion.
  • Every week, profiles of students who like and benefit from books in school libraries are collected in all schools.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel