Recent Post

6/recent/ticker-posts

2022ஆம் ஆண்டு நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்த்தல் துறையின் கண்ணோட்டம் / 2022 YEAR END REVIEW OF MINISTRY OF ADMINISTRATIVE REFORMS & PUBLIC GRIEVANCES

TAMIL

  • ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லாட்சி முக்கியமானது. "அதிகபட்ச நிர்வாகம், குறைந்தபட்ச அரசு" என்பதை அடைவதற்கு, நிர்வாகக் கட்டமைப்பை மிகவும் வெளிப்படையானதாகவும், திறமையாகவும், குடிமக்களுக்கு ஏற்றதாகவும் மாற்ற பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நல்லாட்சி வாரம் - 2022
  • 2022 டிசம்பர் 19 முதல் 25 வரையிலான நல்லாட்சி வாரத்தில் பொதுமக்களின் குறைகளைத் தீர்த்து மக்களுக்கு சேவைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட “முழுமையான அரசு நிர்வாகம்” என்ற தலைப்பில் ஒரு வார காலம் நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
  • இந்தப் பிரச்சாரத்தின் போது, சுமார் 54 லட்சம் மக்கள் குறைகள் தீர்க்கப்பட்டன; சேவை வழங்கலுக்கான 315 லட்சம் விண்ணப்பங்கள் பைசல் செய்யப்பட்டன; நிர்வாகத்தில் 982 புதுமை முயற்சிகள் ஆவணப்படுத்தப்பட்டன.
நிலுவை விஷயங்களைப் பைசல் செய்ய சிறப்பு முகாம்கள்
  • தூய்மை மற்றும் அரசு அலுவலகங்களில் நிலுவை விஷயங்களைக் குறைத்தல் குறித்த சிறப்பு இயக்கம் 2.0, 2022 அக்டோபர் 2 முதல் 31 வரை நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் பிற அலுவலகங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  • இந்த இயக்கத்தின் விளைவாக 89.85 லட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது; அலுவலகக் கழிவுகளை அகற்றியதன் மூலம் ரூ. 370.73 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்த இயக்கத்தின் போது சுமார் 4.39 லட்சம் பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டன. 
  • தக்கவைப்பு கால அட்டவணையை நிறைவு செய்த சுமார் 29.40 லட்சம் கோப்புகள் அகற்றப்பட்டன. பல அமைச்சகங்கள் 100% அகற்றல் இலக்கை அடைய முடிந்தது.
  • சிறப்பு இயக்கம் 2.0-ன் அளவு 2021-ன் சிறப்பு இயக்கத்தை விட 16 மடங்கு பெரியது. இந்த இயக்கம் சமூக ஊடகங்களில் 4 பில்லியன் பதிவுகளையும் 9 லட்சம் ஈடுபாடுகளையும் கொண்டிருந்தது.
பொதுமக்கள் குறைதீர்த்தலில் குடிமக்களின் குரலுக்கு அதிகாரமளித்தல்
  • 2022 ஆம் ஆண்டில், சிபிகிராம்ஸ் எனப்படும் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்த்தல் மற்றும் கண்காணிப்பு அமைப்பில் 17.50 லட்சம் புகார்கள் பெறப்பட்டன. 
  • இவற்றில் 96.94% புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டன. 2022ல் மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் சராசரி பைசல் காலம் 27 நாட்களாக இருந்தது.
  • குடிமக்களிடமிருந்து நேரடியாகப் பின்னூட்டங்களை சேகரிக்க சிபிகிராம்ஸ் பற்றிய பின்னூட்ட அழைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது.
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கான பிரதமர் விருதுகள்
  • பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கான பிரதமர் விருதுகள் 2021, குடிமைப்பணிகள் தினமான ஏப்ரல் 21, 2022 அன்று மாண்புமிகு பிரதமரால் வழங்கப்பட்டன. 
  • ஊட்டச்சத்து திட்டம், கேலோ இந்தியா, பிரதமரின் ஸ்வநிதி, ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம், சேவைகளை கடைக்கோடிவரை வழங்குதல் எனும் ஐந்து முன்னுரிமை திட்டங்களில் உயர்ந்த சாதனை களுக்காகவும் மத்திய/மாநில/மாவட்ட அளவிலான நிர்வாகத்தில் புதிய முயற்சிகளுக்காகவும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
விஷன் இந்தியா@2047
  • 15வது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி 2022 ஏப்ரல் 20 - 21 தேதிகளில் விஷன் இந்தியா@2047 - குடிமக்களையும் அரசையும் நெருக்கமாகக் கொண்டுவருதல்" என்ற கருப்பொருளில் இரண்டு நாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
  • "விஷன் இந்தியா@2047– ஆளுகை”, “தற்சார்பு இந்தியா, பிரதமரின் விரைவு சக்தி', 'டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல், 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு', 'முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் - ஆகிய மையப்பொருள்களில் நடைபெற்ற கருத்தரங்க அமர்வுகளுக்கு மத்திய அமைச்சர்கள் தலைமை தாங்கினர்.
இ -நிர்வாகம் குறித்த 24வது தேசிய மாநாடு ஹைதராபாதில் 2022 ஜனவரி 7-8 தேதிகளில் "இந்தியாவின் தொழில்நுட்பம் 
  • தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் டிஜிட்டல் நிர்வாகம்" என்ற தலைப்பில் நடைபெற்றது. சிறந்த இ -நிர்வாகப் பயன்பாடுகளுக்காக மத்திய அமைச்சகங்கள்/ துறைகள், மாநிலம்/ யூனியன் பிரதேச அரசுகள், மாவட்டங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் என 6 பிரிவுகளின் கீழ் தேசிய இ -நிர்வாக விருதுகள் 2021 வழங்கப்பட்டன.
சர்வதேசப் பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு
  • கூட்டுப் பணிக்குழு கூட்டங்கள், இணையவழி மாநாடுகள் மற்றும் உயர்நிலை பரிமாற்ற வருகைகள் மூலம் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் காம்பியாவுடன் சர்வதேச ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது.
மண்டல மாநாடுகள்
  • சென்னை, ஸ்ரீநகர், பெங்களூரு, இட்டாநகர் ஆகிய இடங்களில் சிறந்த நடைமுறைகளைப் பரப்புவதற்கான நான்கு மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டன.
ENGLISH
  • 54 lac Public Grievances, 315 lac applications for Service delivery disposed during the “Prashasan Gaon Ki Ore” Campaign during the SUSHASAN SAPTAH 2022 from 19-25 December 2022
  • Resounding success of Special Campaign 2.0 for Institutionalizing Swachhata and Reducing Pendency- Over 1 lakh offices of Government of India across the Country participated in the Campaign Grievance Redressal system made more accessible and responsive through 10 -Step   
Reform process for CPGRAMS
  • Re-engineering of decision-making processes in the Central Secretariat focused on Delayering, Delegation, Desk Officer system and Digitization
  • Revised Central Secretariat Manual of Office Procedure 2022 released, Hindi version of CSMoP 2022 was also brought out for the first time
  • Digital Secretariat – 63 Ministries migrated to e-office ver 7.0, 53% increase in digital receipts in last one year, over 80% files are now in electronic mode
  • Benchmarking Governance -First DGGI for J&K was released; NeSDA 2021 released
  • Recognizing Meritocracy- Conferred PM Awards 2019, 2020 and 2021 for Excellence in Public Administration
  • National e-Governance Awards for digital governance for the year 2021 & 2022 were conferred
  • Good Governance is key to a Nation’s Progress. The following measures have been taken to make the governance architecture more transparent, efficient and citizen-friendly to achieve “Maximum Governance and Minimum Government”.
Good Governance Week-2022
  • A week-long Nation-wide campaign on “Prashashan Gaon ki Ore” aimed at redressal of public grievances and deliver services to the people at their door was organized during the Good Governance Week from 19-25 December 2022. 
  • About 54 lac public grievances and 315 lac applications for service delivery were disposed and 982 innovations in governance were documented during this one-week Campaign.
Special Campaign on Disposal of Pending Matters (SCDPM)
  • The Special Campaign 2.0 on Swachata and reducing pendency in Government offices was conducted successfully from 2nd - 31st October, 2022 in over 1 lakh offices under the Central Government across the country and Indian Missions and Posts abroad. 
  • The Campaign resulted in freeing of 89.85 lac sq ft space and earned revenue of Rs. 370.73 cr by disposal of office scrap. About 4.39 lakh public grievances were disposed of and about 29.40 lakh files which had completed their retention schedule were weeded out during the campaign. Several Ministries were able to achieve 100% disposal against the target during the campaign.
  • The size of the Special Campaign 2.0 was 16 times larger than the Special Campaign of 2021. The campaign attracted 4 billion impressions and 9 lakh engagements on social media.   
Empowering Voice of Citizens - Redressing Public Grievances
  • In 2022, 17.50 lac grievances were received on CPGRAMS of which 96.94% have been disposed of. Average disposal time of Central Ministries/Departments was 27 days in 2022
  • All the 90 Central Ministries/Departments have been on-boarded on CPGRAMS 7.0 enabling auto-forwarding, faster transition and efficient redressal of grievance
  • Feedback Call Center on CPGRAMS has been established to collect feedback directly from the citizens.
  • Intelligent Grievance Management Dashboard leveraging AI/ML technology has been developed and a Data Strategy Unit was set-up to create an analytical insight enabling strategic decision-making and policy reforms.
Secretariat Reforms
  • Central Ministries have made significant improvement in the process reform involving Delayering, Delegation of powers to lower formulations, Desk Officer system and Digitization to improve the decision-making in government. 42 Ministries have fully achieved delayering and 22 have partially delayered the channel of submission.
  • The Sixteenth edition of the Central Secretariat Manual of Office Procedure Manual CSMOP-2022 which is the backbone of the functioning of the central Ministries was released on 5th August 2022. DARPG also brought out the first Hindi edition of CSMoP on 31st October 2022 to facilitate Secretariat functioning in the Official Language
  • Uses of E office has registered further increase with 63 Ministries have migrated to latest version of e office 7.0 enabling inter-Ministerial movement of files. E receipts have grown from 32% in 2021 to 73% in Dec 2022. Over 80% work of Central Ministries are now on e office.
Bench-Marking Governance
  • The first ever District Good Governance Index (DGGI) for Jammu and Kashmir encompassing 10 Governance Sectors and 58 indicators was released on 22nd January, 2022. This was the first attempt of benchmarking Governance at Districts who are the basic unit for administration and governance.
  • National e-Governance Service Delivery Assessment (NeSDA) was released in June 2022. NeSDA framework is to assess effectiveness of e- service delivery applications of States/ UTs and Central Ministries. NeSDA assessed 1400 e-Services across States and UT’s and reported that India’s e-Services had grown by 60 percent in the period 2019-2021. 
  •  More mandatory services are now delivered electronically. (69 percent in 2021 as compared to 48 percent in 2019). 74 percent of the respondents are satisfied/ very satisfied with the e-services.
Recognizing Meritocracy-PM’s Awards for Excellence in Public Administration 2021
  • The Prime Minister’s Awards for Excellence in Public Administration 2021 were conferred by the Hon’ble Prime Minister on the 21st April, 2022 on Civil Services Day 2022. The awards were given for high achievements in five priority programmes - Poshan Abhiyan, Khelo India, PM SVANidhi , One District One Product scheme and End-to-End Delivery of Services and also for Innovation in Governance at Centre/State/District levels.
  • A two-day Conference on the theme “Vision India@2047 – Bringing Citizens and Government closer” was also organized on the occasion of 15th Civil Services Day on 20th - 21st April, 2022. Technical Sessions on the themes- ‘Vision India @2047 – Governance” “Atmanirbhar Bharat, PM GATI SHAKTI’ ,‘Digital Payments and ,‘One District, One Product’ and ‘Aspirational Districts Program – were Chaired by Cabinet Ministers .  
  • 24th National Conference on e-Governance was held at Hyderabad on 7th- 8th January 2022 on the theme “India’s Techade: Digital Governance in a Post Pandemic World”. National e-Governance Awards 2021 were presented under the 6 categories for the best e governance applications of the Central Ministries/ Departments, State/UT Governments, Districts, Local Bodies, Public Sector Undertakings and Academic & Research Institutions.
  • 25th National Conference on e-Governance was held at Katra in Jammu & Kashmir on 26th and 27th November, 2022. The theme of this Conference was “e-Governance–Bringing Citizens, Industry and Government Closer”. Total 18 awards National Awards for e-Governance 2022 to recognise the implementation of e-Governance initiatives were presented during the conference.
  • Good Governance Webinar series on the award-winning initiatives was launched to disseminate award winning practices in governance with Central Ministries/ States and Districts. 9 Webinars out of a series of 13 webinars have been conducted so far on the themes health, education, environment, disaster management, water management and Service delivery etc.
International Exchange & Cooperation
  • International Collaboration were further strengthened with Australia, Singapore, France and Gambia through Joint Working Group meetings, Virtual Conferences and high level exchange visits. 
Vision India@2047 DARPG
  • DARPG constituted the Working group and the Advisory group to formulate the roadmap for Vision India @2047 on Governance. It also collaborated with IIT Madras to draw vision for future ready India in 10 thematic areas of governance in energy, healthcare, infrastructure, education, water, urbanization, Rural Development, Fintech by involving Young Civil Servants, young faculty and Entrepreneurs. 
  • Four Regional Conferences on dissemination of best practices have been organized in Chennai, Srinagar, Bengaluru and Itanagar

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel