TAMIL
- 2022ம் ஆண்டிற்கான ஸ்காச் விருதுக்காக 'ஸ்காச் குரூப்' (SKOCH group) நிறுவனம் அறிவிப்பு செய்திருந்த நிலையில், சென்னை பெருநகர காவல் துறையில் இயங்கி வரும் செயல் திட்டம் காவல் கரங்கள் (சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்படும்,
- மேலும், இந்த திட்டத்தின் மூலம் உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்படும் திட்டம்), சிற்பி (மாணவர்களை நல்வழி படுத்தவும், சட்டத்தை மதிக்கும் இளம் சமுதாயத்தை உருவாக்கவும், அரசு பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு திட்டம்), ஆனந்தம் (பெண் காவலர்கள் தங்கள் பணியிலும் குடும்பத்திலும் சமநிலை படுத்தி வாழும் பயிற்சி திட்டம்), மகிழ்ச்சி (தற்கொலை எண்ணங்கள் மற்றும் குடிபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்காக உளவியல் மறுவாழ்வு திட்டம்), காவலர் விடுப்பு செயலி (காவலர்கள் எளிதில் அனைத்து வகையான விடுப்புகளை எடுப்பதற்கான செயலி திட்டம்) ஆகியவை முன்மொழியப்பட்டு விருதிற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
- இந்த ஸ்காச் விருது ஆரம்ப நிலை, அரை இறுதி நிலை, இறுதி நிலை என 3 கட்டமாக நடத்தப்பட்டது. இதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர்கள் குழுக்கள் அனைத்து செயல் திட்டங்களையும் மதிப்பீடு செய்தார்கள்.
- அவர்களுக்காக அனைத்து செயல் திட்டங்களும் சென்னை பெருநகர காவல் சார்பாக விரிவாக விளக்கப்பட்டிருந்தது.
- மேலும் பொதுமக்கள் சார்பாக இணையவழி முறையில் ஓட்டளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்களும் ஓட்டளித்தனர். இதில் கடந்த அரை இறுதி சுற்றுக்கு காவல் கரங்கள், சிற்பி மற்றும் மகிழ்ச்சி திட்டங்கள் தகுதி பெற்றது.
- ஜன.20 நடைபெற்ற இறுதிசுற்றில் இந்த 3 திட்டங்களுக்கும் ORDER OF MERIT-2022 AWARD கிடைக்கப் பெற்றது. மேலும் இறுதியாக அனைத்து தேர்வு நிலையிலும் "காவல் கரங்கள்" தகுதி பெற்று POLICE & SAFETY -2022-க்கான ஸ்காச் தங்க விருது - 2022 (Skoch Award-2022 - Gold) பெற்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.
- While 'SCOCH group' has announced for the SCOCH award for the year 2022, the action plan running in the Chennai Metropolitan Police Department is Kaval Karagala (abandoned on the roadsides, and mentally challenged persons are rescued and cared for in shelters,
- Also, through this program, volunteer-assisted cremation and dignified burial of unclaimed unclaimed bodies, Chipi (special program for government school students to guide students and create a law-abiding young society), Anandam (training of female constables to balance work and family life) project), GALASH (a psychological rehabilitation program for policemen suffering from suicidal thoughts and alcoholism), Police Leave app (an app project for policemen to take all types of leave easily) were proposed and forwarded for award.
- This Scotch Award was conducted in 3 stages namely preliminary stage, semi-final stage and final stage. Expert committees appointed for this purpose evaluated all the action plans.
- All action plans were explained in detail by the Chennai Metropolitan Police for them. Also, online voting was organized on behalf of the public, so the public also voted. In this last semi-final round, Police Arms, Sculptor and Happiness projects qualified.
- Order of Merit-2022 Award was made available for these 3 projects in the final round held on Jan.20. And finally, "Policemen" qualified in all examination level and got Skoch Award-2022 - Gold for POLICE & SAFETY -2022, which has brought pride to Chennai Metropolitan Police Department.
0 Comments