TAMIL
- ஜப்பானில் 'வீர் கார்டியன் 2023' என்ற பெயரில் இந்திய விமானப் படையும் ஜப்பான் விமானப் படையும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
- இந்த பயிற்சி ஜப்பானின் ஹியாகுரி விமானப் படை தளம் மற்றும் அதன் அருகில் உள்ள ஒமிடாமா மற்றும் சயாமாவில் உள்ள இருமா விமானப் படை தளம் ஆகிய வான் பகுதிகளில் ஜனவரி 16-ம் தேதி முதல் 26-ம் தேதி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
- விமானப் படையில் 3 பெண் போர் பைலட்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவரான அவனி சதுர்வேதி, இரு நாட்டு விமானப் படை போர் பயிற்சியில் பங்கேற்க விரைவில் ஜப்பான் செல்ல இருக்கிறார். இவர் ரஷ்யாவின் சுகோய் ரக எஸ்யூ-30எம்கேஐ என்ற அதிநவீன போர் விமானத்தின் பைலட் டாக இருக்கிறார்.
- ஏற்கெனவே, பிரான்ஸ் விமானப்படை உட்பட வெளி நாட்டு விமானப் படைகள் இந்தியாவுக்கு வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
- அந்த பயிற்சிகளில் இந்திய விமானப் படையின் பெண் பைலட்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், வெளிநாட்டில் நடைபெறும் விமானப் படை போர் பயிற்சியில் இந்திய பெண் பைலட் பங்கேற்பது இதுவே முதல் முறை.
- The Indian Air Force and the Japanese Air Force are engaged in joint combat training in Japan under the name 'Veer Guardian 2023'.
- The exercise will be held for 10 days from January 16 to 26 at Japan's Hyaguri Air Force Base and the nearby airspaces of Omitama and Iruma Air Force Base in Sayama.
- There are currently 3 female fighter pilots serving in the Air Force. One of them, Avani Chaturvedi, is soon to go to Japan to participate in the Air Force Combat Exercise of the two countries. He is a pilot of Russia's Sukhoi SU-30MKI fighter jet.
- Already, foreign air forces, including the French Air Force, have come to India for combat training. Women pilots of the Indian Air Force have participated in those exercises. But this is the first time that an Indian woman pilot is participating in an air force combat exercise abroad.
0 Comments