ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.2.40 லட்சம் கோடி காலி உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ம் இடத்திற்கு பின்தங்கிய அதானி / Hindenburg Report: Rs 2.40 Lakh Crores Adani falls behind to 7th position in world's richest list
அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த 2 ஆண்டாக நடத்திய ஆய்வில், இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்குச்சந்தையில் வரலாறு காணாத மோசடிகளை செய்துள்ளதாகவும், அதன் மூலம் ரூ.17.80 லட்சம் கோடி முறைகேடாக சம்பாதித்துள்ளதாகவும் பல்வேறு ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது.
கடந்த 24ம் தேதி வெளியான இந்த அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அவரது சொத்து மதிப்பு கடுமையாக சரிந்தது.
இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்திலிருந்து 4ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி தற்போது 7ம் இடத்திற்கு பின்தங்கி உள்ளார்.
ப்ளூம்பர்க்கின் உலக பணக்காரர்கள் குறியீட்டின் நேற்றைய அப்டேட்டில், அதானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.60 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.
இதற்கு முன் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஓரிரு நாளில் ரூ.2.40 லட்சம் கோடி வரையிலும் அதானி நஷ்மடைந்துள்ளார்.
0 Comments