சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'நலம் 365' எனும் யூடியுப் சேனலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ மரு.எழிலன் நாகநாதன், முதன்மை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.உமா, மருத்துவத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் துறைச்சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
0 Comments