மகளிர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் அணிகளுக்கான ஏலம் மும்பையில் நடைபெற்றது.
டபிள்யூ ஐபிஎல் போட்டியில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன.
அதன் தொடர்ச்சியாகவே மகளிர் ஐபிஎல் ஏலம் நடத்தப்பட்டது. இதில் அகமதாபாத் அணியை ரூ. 1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கியுள்ளது.
மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், பெங்களூரு அணியை ரூ.901 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனமும், டெல்லிஅணியை ரூ.810 கோடிக்கு ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனமும் வாங்கியுள்ளன. கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் குழும் ரூ.757 கோடிக்கு லக்னோ அணியை வாங்கியுள்ளது.
2008-ல் ஆடவர் ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டபோது கிடைத்த ஏலத்தொகையை விடவும் தற்போது அதிகத்தொகை டபிள்யூஐபிஎல் போட்டிக்குக்கிடைத்துள்ளது என்றும் அணிகளின்ஏலம் மூலமாக ரூ.4669.99 கோடி கிடைத்துள்ளது
0 Comments