Recent Post

6/recent/ticker-posts

7வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் / 7th DIGITAL INDIA AWARD

TAMIL

  • குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புதுடெல்லியில் நடைபெற்ற 7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் சனிக்கிழமை கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். 
  • இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், "டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022, அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் நம்பிக்கையை நிறைவடையச் செய்ய அங்கீகரித்து ஊக்குவிக்கிறது.
  • மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் முன்முயற்சியான இ-நாம், புது தில்லியில் நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022 வழங்கும் நிகழ்ச்சியில் குடிமக்களின் டிஜிட்டல் அதிகாரமளிக்கும் பிரிவில் பிளாட்டினம் விருதை வென்றுள்ளது.  
  • நிகழ்ச்சியில்  தலைமை விருந்தினராக கலந்து கொண்ட குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2022 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை வழங்கினார். 
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே  துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில், வேளாண் அமைச்சகத்தின்  இணைச் செயலாளர் டாக்டர். என்.விஜயலட்சுமி  இந்த விருதை பெற்றுக் கொண்டார்
  • 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 1260 ஏபிஎம்சி மண்டிகளை ஒருங்கிணைத்து, 203 விவசாயம் மற்றும் தோட்டக்கலைப் பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்தை எளிதாக்குவதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சிறந்த லாபகரமான விலையை அடைய இ-நாம் உதவுகிறது.  
  • மண்டி செயல்பாடுகள் மற்றும் விவசாயப் பொருட்களின் மின் வர்த்தகத்தின் டிஜிட்டல் மாற்றத்தை  அது ஊக்குவிக்கிறது. 31.12.2022 நிலவரப்படி, 1.74 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் 2.39 லட்சம் வர்த்தகர்கள் இ-நாம் போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர். 
  • ரூ. 2.42 லட்சம் கோடி மதிப்புள்ள 69 மில்லியன் மெட்ரிக் டன்கள் கொண்ட மொத்த வர்த்தகம் இ-நாம் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • டிஜிட்டல் இந்தியா விருதுகள் மத்திய மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தால்  நிறுவப்பட்டது, இது டிஜிட்டல் ஆளுமைத் துறையில் பல்வேறு அரசு நிறுவனங்களால் புதுமையான டிஜிட்டல் தீர்வுகள்/ முன்மாதிரியான முயற்சிகளை ஊக்குவிக்கவும் கௌரவிக்கவும் தேசிய போர்டல் ஆஃப் இந்தியாவின் கீழ் உள்ளது. 
  • டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022, டிஜிட்டல் இந்தியா பார்வையை நிறைவேற்றுவதில் அரசாங்க நிறுவனங்களை மட்டுமல்லாமல், ஸ்டார்ட்அப்களையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • டிஜிட்டல் இந்தியா விருதுகள் 7 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டது.
ENGLISH
  • President Drabupati Murmu presented the awards at the 7th Digital India Awards in New Delhi on Saturday.
  • Speaking on the occasion, the President said, “Digital India Awards 2022 recognizes and encourages not only government organizations but also startups to fulfill the promise of the Digital India movement.
  • E-NAM, an initiative of the Union Ministry of Agriculture and Farmers Welfare, has won the Platinum Award in the Digital Empowerment of Citizens category at the Digital India Awards 2022 held in New Delhi.
  • President Mrs. Draupadi Murmu, who was the Chief Guest on the occasion, presented the Digital India Awards 2022.
  • In the presence of Union Minister of Electronics and Information Technology, Railways Mr. Ashwini Vaishnav, Joint Secretary, Ministry of Agriculture, Dr. N. Vijayalakshmi received this award
  • E-NAM helps farmers achieve better remunerative prices for their produce by facilitating online trading of 203 agricultural and horticultural products by integrating 1260 APMC mandis across 22 states and 3 union territories.
  • It promotes digital transformation of mandi operations and e-commerce of agricultural products. As on 31.12.2022, more than 1.74 crore farmers and 2.39 lakh traders have registered on e-NAM portal. A total trade of 69 million metric tonnes valued at ₹2.42 lakh crore was recorded on the e-NAM platform.
  • Digital India Awards are established by the Union Ministry of IT and IT under the National Portal of India to promote and honor innovative digital solutions/exemplary initiatives by various government agencies in the field of digital governance.
  • The Digital India Awards 2022 aims to incentivize not only government agencies but also startups in fulfilling the Digital India vision. Digital India Awards were presented under 7 different categories.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel