Recent Post

6/recent/ticker-posts

கல்வி துறையில் கலைஞர் ஆட்சியின் சாதனைகள் / ACHIEVEMENT IN EDUCATION DEPARTMENT UNDER KARUNANITHI REGIMES

TAMIL

உயர் கல்வி

  • 1967-ம் ஆண்டுத் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் உயர்கல்வி வளர்ச்சியில், தமிழகத்தில் வரவேற்கத்தக்க ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டது.
  • 1966-ம் ஆண்டுத் தமிழகத்தில் இருந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை 109. அவற்றில் அரசு கல்லூரிகள் 2, தனியார் கல்லூரிகள் 87. அதில் படித்த மாண்வர்களின் எண்ணிக்கை 1,31,093
  • கலைஞர் முதலமைச்சரானதும் 1969 முதல் 1976-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில், 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டன. 
  • பின்னர், அடுத்தடுத்துக் கலைஞர் முதலமைச்சர் ஆன காலகட்டங்களில் புதிதாகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2010-ம் ஆண்டில் தமிழகக் கல்லூரிகளின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்தது.
  • இவற்றில் அரசுக் கல்லூரிகள் 62, பல்கலைக் கழகக் கல்லூரிகள் 9, அரசு உதவி பெறும் கல்லூரிகள் 133, சுயநிதிக் கல்லூரிகள் 383. இந்தக் கல்லூரிகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 7,09,162 ஆக அதிகரித்தது.
இலவச கல்வி
  • திமுக ஆட்சிக்கு வந்த புதிதில், 1968-ம் ஆண்டிலேயே புதுமுக வகுப்பில் இலவசக் கல்வி கொண்டுவரப்பட்டது. அண்ணாவை அடுத்துக் கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலகட்டங்களில் பட்டப்படிப்பும் இலவசக் கல்வியாக்கப்பட்டது
  • போக்குவரத்துக்கு வசதி இல்லாமல் மாணவர்கள் இடைநிற்றல் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு இலவச பயணச் சலுகையும் வழங்கப்பட்டது
  • 2010-ம் ஆண்டு, அரசுக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பும் இலவசமாக்கப்பட்டது.
  • 50 ஆண்டுகளுக்கு முன்பு நகரங்களில் மட்டுமே கல்லூரிகள் என்றிருந்த நிலை மாறி, இன்றைக்குக் கிராமங்களிலும் பல புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருவதற்குத் திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம்.
பொறியியல் கல்வி
  • 1966-ம் ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 12 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இவற்றில் 5, தனியார் கல்லூரிகள். பல்தொழில்நுட்ப பள்ளிகளின் எண்ணிக்கை 35. இவற்றில் 10 தனியாருக்குச் சொந்தமானவை.
  • திமுக அரசின் தொலைநோக்கு திட்டங்களாலும், கல்வி வளர்ச்சிக்கு அளித்த ஊக்கத்தின் காரணமாக மாவட்டங்கள் தோறும் அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
  • 2010-ம் ஆண்டுத் தமிழ்நாடு முழுவதும் 362 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. இவற்றில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 1,18,565 ஆக உயர்ந்தது.
  • பல்தொழிற்நுட்ப பள்ளிகளின் எண்ணிக்கையும் 2010-ம் ஆண்டுவாக்கில் 324 ஆக அதிகரித்து, இவற்றில் 1,00,977 மாணவர்கள் படித்து வந்தனர்.
  • இன்றைக்குத் தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் என்ற நிலை உருவாகி இருக்கிறதென்றால், அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனையாகும்.
மருத்துவ கல்வி
  • 1966-ம் ஆண்டுத் தமிழ்நாட்டில் இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை மொத்தம் 9. இவற்றில் ஒன்று தனியார் கல்லூரி.
  • மாவட்டங்கள் தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவேண்டும் என்ற திமுகவின் குறிக்கோளின் பலனாக, 2010-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 17 ஆகவும், பி.டி.எஸ் மற்றும் செவிலியர் போன்ற இதர மருத்துவப் படிப்புக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆகவும் அதிகரித்தன.
சட்டக் கல்வி
  • 1966-ம் ஆண்டு ஒரே ஒரு சட்டக் கல்லூரிதான் தமிழ்நாட்டில் செயல்பட்டது. இது, 2010-ம் ஆண்டு 8 சட்டக் கல்லூரிகளாக அதிகரித்தது. இவற்றில் ஒன்று தனியார் கல்லூரி.
ஆசிரியர் பயிற்சி
  • 1966-ம் ஆண்டுத் தமிழகத்தில் இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை 9 ஆகும். 2010-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 645 ஆக உயர்ந்தது. ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
பல்கலைக்கழகங்கள்
  • 1966-ம் ஆண்டுத் தமிழ்நாட்டில் இருந்த பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை 3 மட்டுமே. இவற்றில் ஒன்று தனியார் பல்கலைக் கழகம்.
  • திமுக அரசின் சீரிய செயல்பட்டதால், 2010-ம் ஆண்டு 24 அரசு பல்கலைக் கழகங்களும், 25 தனியார் பல்கலைக்கழகங்களும் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன
  • கோவையில் வேளாண் பல்கலைக் கழகம்
  • சென்னையில் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம்
  • நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்
  • சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம்
  • சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம்
  • கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் தலா ஓர் அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகமும்
  • சென்னையில் மேலும் ஓர் அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகம்
  • சென்னையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம்
  • மத்திய அரசின் சார்பில் சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம்
  • திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகமும்
  • திருச்சியிலும் கோவையிலும் பல்கலைக் கழகங்களுக்கு நிகரான மத்திய கல்வி நிலையங்கள்.
  • 1997-ம் ஆண்டு உயர்கல்விக்கெனத் தனியாக ஒரு துறையை ஆரம்பித்து, உயர்கல்வியின் உன்னத வளர்ச்சிக்குப் பாடுபட்டது தி.முக அரசுதான். அந்த வகையில், ஆரம்பக் கல்விக்குக் காமராசர், உயர்கல்விக்குக் கலைஞர் என்று எதிர்கால வரலாறு போற்றும் அளவுக்கு உயர்கல்வி வளர்ச்சியில் சாதனை படைத்தது தி.மு.க அரசு.
ENGLISH

Higher education
  • It was only after the DMK came to power in 1967 that there was a welcome change in the development of higher education in Tamil Nadu.
  • The total number of arts and science colleges in Tamil Nadu in 1966 was 109. Out of them 2 were government colleges and 87 were private colleges. The number of students enrolled in them was 1,31,093.
  • During the period from 1969 to 1976 when the artist became the chief minister, 68 new arts and science colleges were started.
  • Later, new arts and science colleges were opened during successive Chief Minister periods and in 2010 the number of colleges in Tamil Nadu increased to 587.
  • Of these, 62 are government colleges, 9 are university colleges, 133 are government aided colleges, and 383 are self-financed colleges. The number of students studying in these colleges has increased to 7,09,162.
Free education
  • When the DMK came to power, free education was introduced in the freshman class in 1968. Graduation was also made free during the periods when Kalyan took over as Chief Minister after Anna
  • Free travel allowance was also provided to the students so that they do not drop out without the facility of transport
  • In 2010, higher education in government colleges was also made free.
  • 50 years ago the condition of colleges being only in cities has changed and today many new colleges are being started in villages also because of the actions taken by the DMK government.
Engineering education
  • In 1966, there were only 12 engineering colleges in all of Tamil Nadu. 5 of these are private colleges. The number of polytechnic schools is 35. Out of these 10 are privately owned.
  • A large number of engineering colleges were started in every district due to the visionary programs of the DMK government and the encouragement given to the development of education.
  • In 2010, 362 engineering colleges were functioning across Tamil Nadu. The number of students studying in these increased to 1,18,565.
  • The number of polytechnic schools also increased to 324 by 2010, with 1,00,977 students studying in them.
  • If today in Tamil Nadu all the students who apply for engineering courses get a place, it is an achievement of Dravida Munnetra Kazhagam.
Medical education
  • The total number of medical colleges in Tamil Nadu in 1966 was 9. One of these was a private college.
  • As a result of the DMK's goal of starting medical colleges in every district, the number of MPBS and post-graduate medical colleges increased to 17 in 2010, while the number of other medical colleges like BDS and Nursing increased to 33.
Law education
  • In 1966 only one law college was functioning in Tamil Nadu. This increased to 8 law colleges in 2010. One of these is a private college.
Teacher training
  • The total number of teacher training colleges in Tamil Nadu in 1966 was 9. In 2010, this number rose to 645. The number of teacher training students also increased.
Universities
  • In 1966, the number of universities in Tamil Nadu was only 3. One of these is a private university.
  • Due to the smooth functioning of the DMK government, 24 government universities and 25 private universities were started in 2010 during the DMK regime.
  • Agricultural University, Coimbatore
  • University of Veterinary Medicine, Chennai
  • Manonmaniam Sundaranar University in Nellai
  • Periyar University, Salem
  • Dr. Ambedkar Law University, Chennai
  • One Anna Technical University each at Coimbatore, Trichy, Tirunelveli and Madurai
  • Another Anna Technical University in Chennai
  • University of Teacher Education, Chennai
  • Maritime University at Chennai on behalf of Central Govt
  • Central University at Thiruvarur
  • Central educational institutions equivalent to universities in Trichy and Coimbatore.
  • It was the DMK government that started a separate department for higher education in 1997 and strived for the noble development of higher education. In that way, the DMK government achieved such a record in the development of higher education that the future history will praise it as Kamarasar for primary education and artist for higher education.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel