Recent Post

6/recent/ticker-posts

சுகாதாரத் துறையில் கருணாநிதி அரசின் சாதனைகள் / ACHIEVEMENTS OF KARUNANITHI GOVERNMENT IN HEALTH

TAMIL
  • 1966-ம் ஆண்டுத் தமிழகத்தில் இருந்த மருத்துவமனைகளின் மொத்த எண்ணிக்கை 515. இவற்றில், தனியார் மருத்துவமனைகளும் அடங்கும். 
  • ஆனல், 2010-ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளின் மொத்த எண்ணிக்கை 10,784 ஆக அதிகரித்தது. இவற்றுடன் 10 நடமாடும் மருத்துவமனைகளும் இருந்தன. 
  • இவையல்லாமல், ஆயிரக்கணக்கான தனியார் மருத்துவமனைகளும் செயல்பட்டு வந்தன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல், தளபதி ஸ்டாலின் அவர்கள் சென்னை மேயராகப் பதவி வகித்த காலக் கட்டத்தில் சென்னை மாநகரம் இந்தியவின் மருத்துவத் தலைநகரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு உயர்ந்தது. 
  • மல்டி ஸ்பெஷாலிடி எனப்படும் சிறப்பு மருத்துவமனைகளும் உருவாயிற்று. இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து மக்கள் சென்னை வந்து மருத்துவம் செய்துகொண்டு நலமுடன் திரும்பிச் சென்றனர்.
  • தி.மு.க ஆட்சியின்போது, குழந்தைகள் நலம் காக்க போலியோ ஒழிப்புத் திட்டத்தை நிறைவேற்றியதில், தமிழகம் இந்தியாவில் முதல் இடம் வகித்தது. 
  • எய்ட்ஸ் என்னும் கொடிய நோயைக் கட்டுப்படுத்தியதிலும் தமிழகம் இந்தியாவில் முதல் இடம் பெற்றது. மேலும், பிறப்பு விகிதத்தைக் குறைத்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதிலும் இந்தியாவிலே தமிழகம்தான் முதல் இடம் வகித்தது. 
  • மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில், இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமெனத் தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குரிய ஜே.ஆர்.டி. சுழற்பரிசு கேடயம், நற்சான்றிதழ், பரிசுத் தொகை ரூ.10 லட்சம் ஆகியவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த திரு. சி.பி.தாகூர் அவர்களால், தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த ஆர்க்காடு திரு. நா. வீராசாமி அவர்களிடம் 2001 ஜனவரி 3-ம் நாள் வழங்கப்பட்டது.
  • சுகாதாரத் திட்டத்தை இந்திய அளவில் சிறந்த முறையில் நிறைவேற்றியதற்காகச் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட 2000-மாவது ஆண்டுக்கான ஜே.ஆர்.டி. டாட்டா விருது, மேயர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் 2001 ஜனவரி 31-ம் நாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.பி.தாகூர் அவர்களால் வழங்கப்பட்டது.
  • குழந்தைகள் மரண விகிதத்தைக் குறைத்துள்ளதிலும் தமிழகம் மகத்தான சாதனை புரிந்துள்ளது. 2000-மாவது ஆண்டுவாக்கில், 1000 குழந்தைகள் பிறந்தால், பிறந்த ஓராண்டுக்குள் இந்திய அளவில் 72 குழந்தைகள் இறந்தன. ஆனால் தமிழகத்தில் இந்த விகிதம் 53 குழந்தைகள் என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டது. 
  • கலைஞர் முதன் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றிருந்த காலக் கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கண்ணொளி வழங்கும் திட்டத்திற்கு இடையில் தொய்வு ஏற்பட்டது. 
  • 1996-க்குப் பின் கழக அரசு இத்திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் அளித்து அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் கண் சிகிச்சை பிரிவுகளை மேம்படுத்தியது. ‘கண் உள் ஆடி’ களுக்கு (Contact Lens) விற்பனை வரி அறவே நீக்கப்பட்டது.
ENGLISH
  • The total number of hospitals in Tamil Nadu in 1966 was 515. These included private hospitals. In 2010, the total number of government hospitals increased to 10,784. Along with these there were 10 mobile hospitals.
  • Apart from these, thousands of private hospitals were also functioning. To top it all off, during the tenure of General Stalin as the Mayor of Chennai, the city of Chennai rose to such an extent that it can be said to be the medical capital of India.
  • Special hospitals called multi-specialty were also formed. Not only India, people from various foreign countries came to Chennai for medical treatment and went back healthy.
  • During the DMK rule, Tamil Nadu was the first in India to implement the polio eradication program to protect the health of children.
  • Tamil Nadu also ranked first in India in controlling the deadly disease AIDS. Also, Tamil Nadu was the first in India to reduce the birth rate and control the population.
  • Tamil Nadu was selected as the best state in India in terms of population control and the corresponding JRD. The circular shield, certificate and prize money of Rs.10 lakh were presented to Mr. who was the Union Health Minister. By C.P. Tagore, Mr. Arkadu who was the Minister of Welfare Department of Tamil Nadu. Na. Veerasamy was given on 3rd January 2001.
  • The 2000-year JRD was awarded to the Chennai Corporation for the best execution of its health program in India. Tata Award, Mayor Mr. M.K. It was presented to Stalin on 31 January 2001 by Union Health Minister Dr CP Tagore.
  • Tamil Nadu has also made great progress in reducing the child mortality rate. By the year 2000, for every 1000 children born, 72 children died within one year of birth in India. But in Tamil Nadu this ratio was limited to 53 children.
  • There was a hiatus between the Kannoli scheme, which was introduced during the tenure of the Chief Minister for the first time.
  • After 1996, the Union government revived the scheme and upgraded eye care units in all district hospitals. Sales tax on contact lenses has been removed.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel