உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சமோலி மாவட்டம் ஜோஷிமத் நகரில் உள்ள வீடுகள் உட்பட பல கட்டங்களில் கடந்த சில வாரங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் அச்சம் சாலை உள்ளிட்ட இடங்களில் பூமி வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த நகரம் மண்ணுக்குள் புதையும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து இங்குள்ள நிலைமை குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆய்வு செய்தார்.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று அழைத்து, புஷ்கர் சிங் தாமியிடம் அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் பிரதமர் அறிவுறுத்தினார். அபாய பகுதிஇந்நிலையில், ஜோஷிமத் பகுதியை, நிலச்சரிவுமண்டலமாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வந்த, ௬௦ குடும்பங்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டன.
0 Comments