TAMIL
- கேரளாவில் உள்ள கே.ஆர்.கௌரியம்மா அறக்கட்டளை சார்பாக 'கே.ஆர்.கௌரியம்மா சர்வதேச விருது' வழங்க தீர்மானிக்கப்பட்டு அதற்காக விருதினை பரிந்த்துரைக்கும் குழு அமைக்கப்பட்டது.
- இக்குழுவில் கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி, நாடாளுமன்ற உறுப்பினர் பினய் விஸ்வாம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- 'கே.ஆர்.கௌரியம்மா சர்வதேச விருது'-ன் முதல் விருதிற்கு குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளரும், உலகம் அறிந்த கியூப புரட்சியாளரான சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இவ்விருது விழா கடந்த வியாழக்கிழமை அன்று திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.
- இந்நிகழ்வில் சேகுவேராவின் மகளான அலெய்டா குவேராவிற்கு முதல் 'கௌரியம்மா சர்வதேச விருதினை' கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கி கௌரவித்தார்.
- விருதுடன் சேர்த்து பரிசுத் தொகையாக 3000 அமெரிக்க டாலர்களையும் கேரள முதலமைச்சர் வழங்கினார். மறைந்த கே.ஆர்.கௌரியம்மா கேரளாவில் பிரபலமாக அறியப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளர் மற்றும் கேரள அரசின் முதல் அமைச்சரவையில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- On behalf of the KR Gauriamma Trust in Kerala, it was decided to present the 'KR Gauriamma International Award' and a committee was formed to recommend the award.
- Former Kerala Education Minister MA Baby and Member of Parliament Binay Viswam are included in this committee.
- Aleida Guevara, daughter of world-renowned Cuban revolutionary and children's rights activist, has been selected as the first recipient of the 'KR Gouriamma International Award'.
- The award ceremony was held last Thursday in Thiruvananthapuram under the chairmanship of Kerala Chief Minister Pinarayi Vijayan.
- Kerala Chief Minister Pinarayi Vijayan honored Seguera's daughter Aleida Guevara with the first 'Kauriyamma International Award' on the occasion.
- Along with the award, the Kerala Chief Minister also presented a prize money of 3000 US dollars. It is noteworthy that late KR Gauriamma was a well-known Marxist communist activist in Kerala and was inducted into the first Cabinet of the Government of Kerala.
0 Comments