Recent Post

6/recent/ticker-posts

தொழிலாளர் நலன் - கருணாநிதி அரசின் சாதனைகள் / LABOUR WELFARE ACHIEVEMENTS OF KARUNANITHI GOVERNMENT IN POWER SECTOR

TAMIL
  • ஒரு நாட்டின் தொழில் வளம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றையொன்று சார்ந்தவை. தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்ற அதே நேரத்தில், தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பேணுவதும் அரசின் நோக்கமாகும். 
  • நாட்டில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு அங்கு தொழில் அமைதி மிக அவசியமானது. தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து கழக அரசு சிறப்பாக செயல்பட்டது.
  • 1996 – 2001 தி.மு.க ஆட்சியில் தொழில் அமைதியில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்தது. தொழிலாளர் தகராறு காரணமாக தமிழகத்திலே எந்தவொரு பெரிய தொழில் நிறுவனத்திலும் நீண்ட நாள் வேலை நிறுத்தம், கதவடைப்பு போன்ற நிகழ்வுகள் பெறவில்லை என்பதே, நமது தொழிலாளர் நலக் கொள்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.
  • கழக ஆட்சியின்போது, அகில இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியினை ஆராய்ந்து இந்திய தொழிற்குழுமம் (Confederation Of Indian Industry) ஒரு அறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையில், இந்தியாவிலேயே தொழில் அமைதி நிலவுவதிலும், தொழிலாளர் நலன்களை பாதுகாப்பதிலும் தமிழகம் முதல் இடம் வகிக்கின்றது என்றும் குஜராத் இரண்டாவது இடம் என்றும் ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிகளில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுமார் 2,500 பேர் 1996 – 2001 கழக ஆட்சியின்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள்.
  • தமிழ்நாடு மின் வாரியத்திற்குச் சொந்தமான நான்கு அனல் மின் நிலையங்களிலும் இரண்டு எரிவாயு சுழல் மின் நிலையங்களிலும் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 7,651 பேர் 1-1-1999 முதல் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள்.
  • 1996-ம் ஆண்டின் தொடக்கத்தில் கழக ஆட்சியின்போது பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 23,053 என்றிருந்தது. அடுத்த 4 ஆண்டுகளில் மேலும் 4,938 தொழிற்சாலைகள் புதிதாக கொண்டு வரப்பட்டு 2000-மாவது ஆண்டின் தொடக்கத்தில் 27,991 தொழிற்சாலைகளாக பதிவு செய்யப்பட்டன. 
  • தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குதல் சட்டம் 1981-ன்படி 1996 – 2001 தி.மு.க ஆட்சிக் காலத்தில் முதல் நான்காண்டுகளில் மட்டும் மொத்தம் 87,580 தொழிலாளர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
  • மூடிக் கிடந்த நிறுவனங்களைத் திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும், பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும் கழக அரசு முன்னிலை வகித்தது. டன்லப் இந்தியா தொழிற்சாலை, கொங்கரார் காட்டன் மில்ஸ், தஞ்சாவூர் டெக்ஸ்டைல்ஸ், குவாலிட்டி ஸ்பின்னர்ஸ், பழனியாண்டவர் காட்டன் மற்றும் சிந்தடிக் டெக்ஸ்டைல்ஸ், காகா ஷூஸ், அண்ணாமலையார் டெக்ஸ்டைல்ஸ் போன்ற மூடிக்கிடந்த நிறுவனங்கள் கழக அரசு பொறுப்பேற்றவுடன், படிப்படியாக செயல்படத் தொடங்கின. வரிகளில் சீர்திருத்தம் செய்வதிலும் தி.மு.க அரசு சிறப்பாக செயல்பட்டது.
  • பெரும்பான்மையான பொருள்கள் மீதிருந்த பலமுனை வரியை நீக்கி 1989 – 90-ம் ஆண்டில் கழக ஆட்சியின்போது ஒருமுனை வரி கொண்டுவரப்பட்டது. பின்னர் வந்த அ.தி.மு.க ஆட்சியில் பல பொருட்களுக்குப் பலமுனை வரி விதிக்கப்பட்டது. 1996-ல் மீண்டும் கழா அரசு பொறுப்பெற்றவுடன், எல்லாப் பொருட்களின் மீதும் பலமுனை வரியை அகற்றி ஒருமுனை வரியாக மாற்றம் செய்யப்பட்டது.
  • 1975-ம் ஆண்டு இறுதியில் திராவிட முன்னேற்றக் கழக அரசால் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட “தமிழ்நாடு வணிகர் நல வாரியம்” 1976 ஜனவரியில் கழக அரசு கலைக்கப்பட்டமையால் தொடங்கப்படவில்லை. 
  • பின்னர், 1989-ம் ஆண்டு கழக அரசு மீண்டும் அமைந்தபோது, 25.9.1989 அன்று வெளியிடப்பட்ட ஆணையின்படி தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தொடங்கப்பட்டு, 28.9.2000 வரை 35,352 வணிகர்கள் ஆயுள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர்.
  • தமிழக வரலாற்றில் முதன்முறையாக 1999-2000 நிதிநிலை அறிக்கை தயாரிக்கும்முன் மாநிலத்திலுள்ள அனைத்து வர்த்தகச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள் ஆகியோரை அழைத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டு வரிச்சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 
  • அதுபோலவே, 2000 -2001 நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முன்பும் 11.3.2000 அன்று கூட்டம் நடத்தப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன. தொழிற்சாலை பெருக்கம், வணிகம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகளை விரைந்து பெறுவதற்கு போக்குவரத்து சிறப்பாக இருப்பது முக்கியம். 
  • இதை கருத்தில் கொண்டு, கிராமப்புறங்களை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் இணைப்புச் சாலை திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 1976-க்கு முன்பே தீட்டி அதில் வேகமான வளர்ச்சி கண்டது என்பதை அனைவரும் அறிவர்.
ENGLISH
  • A country's industrial prosperity, economic progress and industrial peace are interdependent. It is the government's objective to maintain labor welfare and employment while promoting industrial development. Industrial peace is essential for the growth of industries in the country. Realizing that there will be industrial peace only if the welfare of the workers is protected, the Corporation Government acted well.
  • 1996 – 2001 DMK rule Tamil Nadu ranked first in industrial peace. The fact that no long-term strike or lockout occurred in any large industrial company in Tamil Nadu due to labor disputes is a good example of our labor welfare policy.
  • During the League rule, the Confederation of Indian Industry prepared a report examining the development of each state on an all-India scale. In the report, it was mentioned that Tamil Nadu ranks first in terms of industrial peace and protection of labor interests in India, Gujarat ranks second and Andhra Pradesh ranks third.
  • Around 2,500 heavy lifting workers who worked in Tamil Nadu Consumer Goods Trading Corporation warehouses for more than a decade were made permanent during the 1996-2001 Corporation rule.
  • 7,651 contract workers who were working in four thermal power plants and two gas turbine power plants owned by Tamil Nadu Electricity Board were made permanent with effect from 1-1-1999.
  • At the beginning of 1996, the number of factories registered during the Corporation regime was 23,053. In the next 4 years another 4,938 new factories were brought up and by the beginning of 2000, 27,991 factories were registered. According to the Permanent Employment Act, 1981, a total of 87,580 workers were given permanent employment in various industries during the first four years of the DMK regime from 1996 to 2001.
  • The Corporation Government took the lead in opening the closed enterprises and providing employment opportunities to the workers and developing the economy. The shuttered companies like Dunlop India Factory, Konkarar Cotton Mills, Thanjavur Textiles, Quality Spinners, Palaniandwar Cotton and Synthetic Textiles, Gaga Shoes, Annamalaiyar Textiles etc. gradually started functioning after the Corporation government took over. The DMK government has also done well in reforming taxes.
  • Unilateral tax was introduced during the Corporation rule in 1989-90, eliminating the multi-terminal tax on most items. In the later ADMK regime, multi-point tax was imposed on many goods. In 1996, when the state government took over again, the multi-point tax was abolished and converted into a single-point tax on all goods.
  • The "Tamil Nadu Merchant Welfare Board" announced to be started by the Dravida Munnetra Kazhagam government at the end of 1975 was not started due to the dissolution of the Kazhagam government in January 1976. Later, when the Corporation Government was re-established in 1989, the Tamil Nadu Merchant Welfare Board was started as per the order issued on 25.9.1989 and till 28.9.2000 35,352 merchants were enrolled as life members.
  • For the first time in the history of Tamil Nadu, before the preparation of the 1999-2000 financial statement, all trade associations and businessmen's associations in the state were invited and asked for their views on tax reform measures. 
  • Similarly, a meeting was held on 11.3.2000 before the preparation of the financial statements for 2000-2001 and comments were sought. Better transport is important for accelerating industrial growth, business, economic growth and employment opportunities. 
  • With this in mind, it is well known that the Dravida Munnetra Kazhagam regime launched the link road scheme to connect rural areas with major roads before 1976 and saw rapid development in it.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel