Recent Post

6/recent/ticker-posts

சிறுதொழில் வளர்ச்சியில் கருணாநிதி அரசின் சாதனைகள் / MSME SECTOR ACHIEVEMENTS OF KARUNANITHI GOVERNMENT

TAMIL
  • தமிழக தொழிற்துறை வரலாற்றில், ஒரே இடத்தில் பல தொழில்கள் உருவாவதற்கு வகை செய்யும் தொழில் வளாகங்களை(SIDCO) முதன்முதல் அமைத்த பெருமை கழக அரசுக்குத்தான் உண்டு. இதற்காக, 1970-களில் தொழிற்மயமாக்குவதற்கான நிறுவனங்களை தி.மு.க அரசு ஏற்படுத்தியது.
  • 1966-ம் ஆண்டுத் தமிழ்நாட்டில் 6,993 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. இவற்றில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 967 தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், 2010-ம் ஆண்டுத் தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 515 ஆக உயர்ந்தது. அவற்றில் வேலை பார்த்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 45 ஆயிரத்து 928 ஆக அதிகரித்தது. தி.மு.க அரசு கடைபிடித்த தொழிலாளர் கொள்கையும், தொழில் முனைவோருக்கு அளித்த பல்வேறு ஊக்கமும் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் பெருக காரணமாய் அமைந்தன.
  • தமிழகத்திலுள்ள தேயிலை, ஜவ்வரிசி, கயிறு, தீப்பெட்டி, கைவினைப் பொருட்கள் முதலியவை சார்ந்த 335 தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1996 – 2001 கழக ஆட்சியின்போது, முதல் நான்கரை ஆண்டுகளில் மட்டும் 1,630 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதே காலகட்டத்தில், 4,715 சிறு தொழில் நிறுவனங்களுக்கு 93.54 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்பட்டது. 14,779 சிறுதொழில் நிறுவனங்களுக்கு 32 கோடி ரூபாய் குறைந்த அழுத்த மின்கட்டண மானியமாக வழங்கப்பட்டது.
  • மேலும், 1,43,562 சிறுதொழில் நிறுவனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் மூலம் 2,813.38 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டன. 12 லட்சத்து 66 ஆயிரத்து 21 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன.
  • In the history of Tamil Nadu industry, the Corporation Government has the honor of being the first to set up Industrial Complexes (SIDCOs) which allow for the creation of multiple industries at one place. For this, the DMK government set up industrialization institutes in the 1970s.
  • In 1966 there were only 6,993 factories in Tamil Nadu. Out of these 3 lakh 84 thousand 967 workers were working. However, the number of factories increased to 40 thousand 515 during DMK regime in 2010. The number of workers employed in them increased to 12 lakh 45 thousand 928. The labor policy adopted by the DMK government and various incentives given to entrepreneurs led to the proliferation of factories in large numbers.
  • Also, 1,43,562 small business enterprises were newly registered and investments of Rs.2,813.38 crore were made through them. 12 lakh 66 thousand 21 people got job opportunities.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel