Recent Post

6/recent/ticker-posts

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு / Pakistan's Abdul Rehman Maki declared international terrorist

  • நம் அண்டை நாடான பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரும், மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டவருமான ஹபீஸ் சயீதின் உறவினர் அப்துல் ரஹ்மான் மக்கியை, சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க, இந்தியா கடந்த ஆண்டு ஐ.நா.,விடம் வலியுறுத்தியது. 
  • ஆனாலும், இந்தியாவும், அமெரிக்காவும் தங்களது உள்நாட்டு சட்டப்படி, அப்துல் ரஹ்மான் மக்கியை பயங்கரவாதியாக கடந்த ஆண்டு அறிவித்தன.
  • இந்நிலையில், லஷ்கர் - இ - தொய்பா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் மற்றும் அவற்றுடன் தொடர்புடையவர்கள், குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தடை விதித்து, ஐ.நா., பாதுகாப்புக் குழு தீர்மானம் கொண்டு வந்தது. 
  • இதன் அடிப்படையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கர வாதியாக அறிவித்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel