TAMIL
- கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளவும் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பண மதிப்பிழப்பை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
- இதையடுத்து அன்று முதல் ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. எனினும், இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
- மத்திய அரசின் இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
- அதன்படி, இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், பி.ஆர்.காவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
- அப்போது அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'இந்த வழக்கில் விசாரணை முடிந்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும்(ஆர்பிஐ) தாக்கல் செய்ய வேண்டும்' என தெரிவித்தனர்.
- அதன்படி மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீதிமன்ற வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் ஜனவரி 2ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
- அதன்படி, பண மதிப்பிழப்பு வழக்கில் இன்று (ஜனவரி 2) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என அமர்வின் நான்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
- அவர்கள் தங்கள் தீரப்பில், "சரியாக ஆலோசித்துதான் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. அதேபோல எல்லா பணத்தையும் மதிப்பிழப்பு செய்யாமல் குறிப்பிட்ட தொகையை மட்டும்தான் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.
- நோட்டுகளை மாற்ற 52 நாட்கள் அவகாசம் அளித்தது நியாயமானதுதான். பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடமும் மத்திய அரசு ஆலோசித்திருப்பதை கவனிக்க முடிகிறது.
- எனவே, பணமதிப்பிழப்பு முடிவை இனி திரும்பப் பெற முடியாது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்" எனத் தீர்ப்பளித்துள்ளனர்.
- இதில் நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தார். "ஒரே அரசாணை மூலம் 1000, 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தது தவறு.
- பணமதிப்பிழப்பு நடவடிக்கை ரகசியமாக செய்ய வேண்டுமென மத்திய அரசு கருதியிருந்தால், அதை அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்றி இருக்கலாமே? இத்தகைய தீவிர நடவடிக்கையில் நாடாளுமன்றத்தை நாடாமல், இதுகுறித்து முடிவு எடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாது" எனத் தீர்ப்பளித்துள்ளார்.
- Prime Minister Narendra Modi announced demonetisation on November 8, 2016 to eradicate black money and facilitate digital transactions. Since then Rs. 500 and Rs. 1,000 notes were demonetised. However, it was announced that new currency notes can be obtained by submitting these currency notes to banks.
- 58 petitions were filed in the Supreme Court against the central government's demonetisation move. The court announced that all these petitions will be heard by a 5-judge constitutional bench.
- Accordingly, the case was taken up for hearing before the bench of Justices SA Naseer, PR Kawai, AS Bopanna, V. Ramasubramanian and PV Nagaratna.
- After hearing all the arguments, the judges said, 'The investigation in this case is over. Judgment is deferred. The central government and the Reserve Bank of India (RBI) should file the documents related to this case,' they said.
- Accordingly, affidavits were filed by the Central Government and the Reserve Bank of India. After all the arguments in the court were over, the Supreme Court had announced that the verdict in this case would be given on January 2.
- Accordingly, the Supreme Court has given its judgment in the currency devaluation case today (January 2). In this, the four judges of the session ruled that the demonetization process will go ahead.
- In their judgement, they said, "The central government has taken this step after proper deliberation. Similarly, it has taken the step of demonetizing only a certain amount without demonetizing all the money.
- 52 days time to exchange the notes was reasonable. The central government has full power to carry out economic activity. It can be observed that the central government has also consulted the Reserve Bank in this regard.
- Therefore, the demonetisation decision can no longer be reversed. We dismiss all the petitions filed against it. The currency devaluation will proceed".
- Judge P.V. Only Nagaratna ruled against the central government. "It is wrong to demonetize 1000 and 500 rupee notes through a single decree. If the central government had thought that the demonetization should be done secretly, could it have been done through an ordinance? It is not acceptable to take such a drastic step without resorting to the parliament," he said.
0 Comments