டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழ்நாடு ஊர்தி தேர்வு / Tamil Nadu selection of vehicles to participate in the Republic Day parade in Delhi
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, தலைநகர் டெல்லியில் அணிவகுப்பு நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இவை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பெருமையை, பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் இருக்கும்.
முன்னதாக, குடியரசு தின அணிவகுப்பில் எந்தெந்த அலங்கார ஊர்திகள் இடம்பெற ணேடும் என்று ஒன்றிய அரசு தேர்வு செய்யும்.
டெல்லியில் வருகிற 26ம் தேதி நடைபெறும் அணிவகுப்பில் எந்தெந்த அலங்கார ஊர்திகள் இடம்பெற வேண்டும் என தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. அதில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் சார்பில், மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரிகளை தமிழக அரசு வழங்கி இருந்தது. முன்னதாக இந்த அணிவகுப்பில் பங்கேற்க 7 கட்டமாக தேர்வுகள் நடைபெற்றது.
இதில் தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார ஊர்தியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், குஜராத், அரியானா, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், லடாக் உள்ளிட்ட மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments