Recent Post

6/recent/ticker-posts

போர் அச்சுறுத்தல்களை மீறி யுனெஸ்கோ அந்தஸ்தைப் பெற்றுள்ள உக்ரேனிய துறைமுகம் / Ukrainian port to gain UNESCO status despite war threats

  • இயற்கை தளங்கள், பாரம்பரிய கட்டிடங்களை அதன் வரலாற்று தனித்தன்மையுடன் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் சில இடங்களை பாரம்பரிய தலமாக அறிவிக்கும்.
  • அதை எந்த சேதமும் ஆகாமல் பாதுகாப்பது மனித சமூகத்தின் கடமை என்று விதித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. 
  • இந்நிலையில் போர்களை தாண்டி ஐக்கிய நாடுகளின் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ உக்ரைனின் கருங்கடல் பகுதியில் உள்ள ஒடெசா துறைமுக நகரத்தை உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
  • யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 21 உறுப்பு நாடுகளில் 6 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இரு நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் 14 நாடுகள் வாக்களிக்காமல் விலகிவிட்டது. 
  • ரஷ்யா இந்த தலத்தின் 'சிறந்த உலகளாவிய மதிப்பை' அங்கீகரிக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்தவும் வாக்குபதிவை தவிர்க்கவும் பலமுறை முயற்சித்தது. ஆனால் இறுதியில் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் இந்த இடத்தை பாதுகாக்க உக்ரைன் வலுவூட்டப்பட்ட தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை சர்வதேச அளவில் பெற முடியும் என்று யுனெஸ்கோவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel