மறைந்த திரு மனோகர் பாரிக்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கோவா பசுமை சர்வதேச விமான நிலையத்திற்கு அவருடையப் பெயரை வைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves naming of Goa Green International Airport as a tribute to late Mr. Manohar Parrikar
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கோவா மாநிலத்தின் 4 முறை முதல்வராகவும், மத்தியப் பாதுகாப்பு அமைச்சராகவும், பதவி வகித்த மறைந்த திரு மனோகர் பாரிக்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருடையப் பெயரை கோவா பசுமை சர்வதேச விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
கோவா மாநில பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற மறைந்த திரு மனோகர் பாரிக்கரை நினைவு கூறும் வகையில், கோவா பசுமை சர்வதேச விமான நிலையத்திற்கு ‘மனோகர் சர்வதேச விமான நிலையம் – மோபா, கோவா’.
கடந்த 2022 –ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோவா பசுமை விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தது நினைவிருக்கலாம்.
0 Comments