Recent Post

6/recent/ticker-posts

பிரிட்டன் நாட்டில் திருமணம் செய்யும் வயது 18 ஆக உயர்ந்தது / MARRIED AGE INCREASED TO 18 IN BRITAIN

  • இந்தியாவையே ஒரு காலத்தில் ஆட்சி செய்த பிரிட்டன் நாட்டில் திருமணத்திற்கான குறைந்த பட்ச வயது 18ஆக தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது. 
  • அங்கு இதற்கு முன் 16, 17 வயதுகளை ஒத்தவர்களுக்கு பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதாக புகார் நீண்ட காலம் எழுந்து வந்தது.
  • இந்த சூழலில் இதுபோன்ற கட்டாய குழந்தை திருமணத்தை தடுக்கும் விதமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அரசுகள் திருமணத்திற்கான குறைந்த வயதை 18ஆக உயர்த்தி சட்டம் கொண்டு வந்துள்ளன. 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு எந்த சூழலில் திருமணம் செய்து வைத்தாலும் அது சட்டப்படி குற்றம்.
  • எனவே, இனி இரு தரப்பு ஒன்று சேர்ந்து 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை முழு வீச்சில் பாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றமானது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் மட்டுமே நடைமுறையில் இருக்கும். பிரிட்டன் அரசின் அங்கங்களான ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்தில் இந்த வயது 16 ஆகவே தொடரும் எனத் தெரிகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel