Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதலாவது கூட்டம் / First meeting of Finance Ministers and Central Bank Governors under India's G20 Presidency

TAMIL

  • இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதலாவது கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 
  • அப்போது பிரதமர் பேசுகையில், இன்று உலகளவில் எதிர்கொள்ளப்படும் சவால்களை சுட்டிக் காட்டிய அவர், 'மோசமான பொருளாதார சூழல்களை உலகம் சந்தித்து வரும் வேளையில், உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார தலைமைத்துவத்தின் பிரதிநிதியாக கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
  • கொரோனா பெருந்தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் தாக்கங்கள், அதிகரித்து வரும் புவி- அரசியல் நிகழ்வுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இடையூறுகள், விலையேற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உட்பட பல விஷயங்கள, உலகின் முன்னணி பொருளாதாரங்கள் மற்றும் நிதி அமைப்புமுறைகளின் பாதுகாவலர்களை சார்ந்துள்ளது.
  • நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து இந்திய நுகர்வோர் மற்றும் தயாரிப்பாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. உலக அளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக கூடிய மக்கள் குறித்து விவாதங்களில் உறுப்பினர்கள் கவனம் செலுத்தவும். 
  • அம்மக்களை உள்ளடக்கிய திட்டத்தை உருவாக்குவதன் வாயிலாக மட்டுமே, உலகின் நம்பிக்கையையும் சர்வதேச பொருளாதார தலைமைத்துவத்தையும் மீண்டும் கொண்டு வர இயலும். 
  • 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற தொலைநோக்குப் பார்வையை இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருள் ஊக்குவிக்கிறது. 
  • உலக மக்கள் தொகை 8 பில்லியனைக் கடந்துள்ள போதும், நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம், தொய்வடைகிறது' என்றார்.
  • தொடர்ந்து இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்புமுறை பற்றி பேசிய அவர், 'யு.பி.ஐ என்ற இந்தியாவின் தலைசிறந்த டிஜிட்டல் கட்டணத் தளத்தை ஜி20 விருந்தினர்கள் பயன்படுத்த இது வழிவகை செய்கிறது. 
  • யு.பி.ஐ போன்ற உதாரணங்கள் ஏராளமான இதர நாடுகளுக்கும் முன்மாதிரியாக செயல்படலாம். எங்களது அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவதோடு, இதன் உந்துசக்தியாக ஜி20 செயல்படக்கூடும்' என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்

ENGLISH

  • Prime Minister Narendra Modi addressed the first meeting of Finance Ministers and Central Bank Governors under India's G20 chairmanship via video.
  • Speaking then, the Prime Minister pointed out the challenges facing the world today and said, 'While the world is facing adverse economic conditions, the participants of the meeting are representative of the global financial and economic leadership.
  • The coronavirus pandemic and its impacts on the global economy, escalating geo-political events, disruptions in global supply chains, price inflation, food and energy security, and many other factors, have placed the world's leading economies and financial systems on guard.
  • There is high expectation among Indian consumers and producers about the future of the country's economy. Members should focus discussions on the most vulnerable populations globally.
  • Only by developing an inclusive program can the world's confidence and international economic leadership be restored.
  • The theme of India's G20 leadership promotes the vision of 'One Earth, One Family, One Future'.
  • "Even as the world's population crosses 8 billion, progress on the Sustainable Development Goals continues to falter," he said.
  • Talking about the new system developed during India's ongoing G20 leadership, he said, 'It enables G20 guests to use UPI, India's leading digital payment platform.
  • Examples like UPI can serve as a model for many other countries. "We are happy to share our experiences with the world and the G20 can act as a driving force for this," he concluded his speech.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel