ஜி20-ன் முதலாவது வேலைவாய்ப்புப் பணிக்குழுக்கூட்டம் / G20 EMPLOYMENT WORKING GROUP MEETING: ஜி20 இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ், முதலாவது வேலைவாய்ப்பு பணிக்குழுக்கூட்டம் 2023, பிப்ரவரி 2 முதல் 4ம் தேதி வரை ஜோத்பூரில் நடைபெறுகிறது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தலைமையில் நடைபெற்று வரும் விவாதத்தில் தொழிலாளர், வேலைவாய்ப்பு, சமூக விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய திறன் மற்றும் தகுதிகளுக்கான உத்திகளை கண்டறிதல் மற்றும் பொதுவான திறன் வகைகளுக்கான கட்டமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் குழு விவாதம் இன்று நடைபெற்றது.
உலகளாவிய திறன் இடைவெளிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக தங்களது கருத்துக்களை உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டனர்.
ஜி 20 நாடுகள், விருந்தினர் நாடுகள்,சர்வதேச மற்றும் தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இதர சர்வதேச, தேசிய அளவிலான முக்கிய நிபுணர்கள் விவாதத்தில் பங்கேற்றனர்.
மத்திய மாநில அரசு முகமைகளின் அதிகாரிகள், தொழில்துறை, கல்வித்துறை பிரதிநிதிகள் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
திறன் மற்றும் சான்றளிப்பதில் பரஸ்பர அங்கீகாரம் மற்றும் திறன் தொடர்பாக சர்வதேச உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து குழுவினர் வலியுறுத்தினார்கள்.
ENGLISH
Under the leadership of G20 India, the first Employment Working Group Meeting 2023 will be held in Jodhpur from February 2 to 4. Labor, employment and social issues have been emphasized in the discussion led by the Ministry of Labor and Employment.
A panel discussion was held today on identifying strategies for universal skills and competencies and establishing a framework for common skill categories. Members shared their views on key issues including global skills gaps.
G20 countries, guest countries, representatives of international and national organizations and other international and national level key experts participated in the discussion.
Officials of central and state government agencies, representatives of industry and academia participated in the discussion. The group emphasized the need for international dialogue and cooperation on competence and mutual recognition of competence and certification.
0 Comments