Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் தெருவில் வசிக்கும் குழந்தைகள் குறித்த அறிக்கை 2023 / REPORT ON CHILDREN LIVES IN STREET OF INDIA 2023

TAMIL
  • REPORT ON CHILDREN LIVES IN STREET OF INDIA 2023: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வீதியில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை வெளியிட்டு இருக்கிறது. 
  • அதன்படி 19,546 குழந்தைகள் இந்தியாவில் வீடுகள் இல்லாமல் வீதியில் பெற்றோர்களுடனும் தனியாகவும் வசிக்கிறார்களாம். இந்த பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது.
  • இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்று அழைப்படும் மும்பையை தலைநகராக கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் 5,153 குழந்தைகள் வீடுகள் இன்றி வீதியில் வசிக்கின்றனர். 
  • அடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 1,990 குழந்தைகள் வீதிகளில் உள்ளனர். இதில் மூன்றாவது இடத்தில் இருப்பது தலைநகர் டெல்லி. அங்கு 1,853 குழந்தைகளில் வீதியில் வசிக்கிறார்கள்.
  • டெல்லிக்கு அடுத்தபடியாக 4 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 1719 குழந்தைகள் தமிழ்நாட்டில் வீதிகளில் வசிக்கின்றன. அடுத்ததாக நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் 1,220 குழந்தைகளும், உத்தரப்பிரதேசத்தில் 1,038 குழந்தைகளும் வீடுகள் இன்றி வீதிகளில் வசித்து வருவதாக தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.
  • அதேபோல், இந்த 19,546 குழந்தைகளில் 10,401 குழந்தைகள் வீதிகளில் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். 8,263 குழந்தைகள் பகல் நேரங்களில் வீதியில் இருந்துவிட்டு இரவு உறங்குவதற்காக மட்டும் குடிசை பகுதிகளில் உள்ள தங்கள் வீட்டுக்கு உறங்க செல்கிறார்கள். 
  • இதில் 1,266 குழந்தைகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் 1,203 குழந்தைகளுடன் டெல்லி 2 வது இடத்திலும் உள்ளன.
  • அதேபோல் 882 குழந்தைகள் பெற்றோர்கள் இன்றி தனியாக வீதிகளில் வசிக்கின்றனர். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது உத்தரப்பிரதேசம். 
  • அங்கு 270 குழந்தைகள் பெற்றோர்களோ, உறவினர்களோ, பாதுகாவலர்களோ இன்றி வீதியில் இருக்கின்றனர். இதில் 2வது இடத்தில் தமிழ்நாடு. இங்கு 124 குழந்தைகள் பெற்றோர் இன்றில் வீதியில் உள்ளார்கள்.
  • 3வது இடத்தில் 105 பேருடன் கர்நாடகாவும், 61 பேருடன் 4 வது இடத்தில் டெல்லியும், 39 பேருடன் 5 வது இடத்தில் மகாராஷ்டிராவும் இருக்கின்றன. 
ENGLISH
  • National Commission for Protection of Child Rights has published the number of children living on the streets. Accordingly, 19,546 children are homeless and live alone with their parents on the streets in India. Maharashtra tops the list.
  • There are 5,153 homeless children living on the streets in the state of Maharashtra, which is known as the economic capital of India and has Mumbai as its capital. Next is Prime Minister Narendra Modi's home state of Gujarat with 1,990 children on the streets. Capital city Delhi is in the third place. There are 1,853 children living on the streets.
  • Tamil Nadu is at the 4th position after Delhi. 1719 children live on the streets in Tamil Nadu. Next, in our neighboring state of Karnataka, 1,220 children and 1,038 children in Uttar Pradesh are homeless and living on the streets, according to the National Commission for Child Rights.
  • Similarly, out of these 19,546 children, 10,401 children are living on the streets with their families. 8,263 children stay on the streets during the day and go to their homes in the slums only to sleep at night. Out of this, Maharashtra is at the top with 1,266 children followed by Delhi at 2nd place with 1,203 children.
  • Similarly, 882 children live alone on the streets without their parents. Uttar Pradesh tops this list. There are 270 children on the streets without parents, relatives or guardians. Tamil Nadu is at the 2nd place. There are 124 children whose parents are on the street today.
  • Karnataka is at 3rd place with 105 people, Delhi is at 4th place with 61 people and Maharashtra is at 5th place with 39 people. Thus the children living on the streets get their necessities by doing small jobs, selling some goods, and receiving alms.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel